
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாபலிபுரத்திற்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டு, மக்களை வியப்பில் ஆழ்த்தியதுடன், குறைகளையும் கேட்டறிந்தார்.
அதிரடி நடவடிக்கைகள் (Action)
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடக்கம் முதலே பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பணி செய்யாத அதிகாரிகளுக்கு நெருக்கடி, கொரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளில் தீவிரம், மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளுதல் என பல செயல்களில் முழுகவனத்தைச் செலுத்தி வருகிறார்.
ஆரோக்கியம் (Health)
இது அலுவலகப் பணிகள் என்றால், தனது உடல் ஆரோக்கியத்திலும் அதிக அக்கறைச் செலுத்தி வருகிறார். தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்பும் ஸ்டாலினுக்கு உடற்பயிற்சி செய்வதிலும் அதிக ஆர்வம் உண்டு.
உடற்பயிற்சி (Exercise)
இதற்காக நடைபயிற்சி, சைக்கிளிங் செல்லுதல், ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதையும் ஸ்டாலின் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
சைக்கிள் பயணம் (Cycling)
முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்பு வாரம்தோறும், ஞாயிற்றுக்கிழமைகளில் கிழக்கு கடற்கரைச் சாலையில் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொள்வார். கொரோனா ஊரடங்கு காரணமாக, சில மாதங்களாக சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபடாமல் இருந்த ஸ்டாலின், கடந்த 4ம் தேதி மகாபலிபுரத்திற்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
குறைகள் கேட்பு (Complaints hearing)
முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக சைக்கிள் பயிற்சி செய்த ஸ்டாலின், வழியில் பொதுமக்களை சந்தித்து பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சைக்கிள் (Bicycle)
முதலமைச்சர் பயன்படுத்திய அந்த சைக்கிள், சென்னை அம்பத்துாரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் தயாரித்து வழங்கியது.
இதில் 81 ஆயிரத்து 500 ரூபாய் விலை உடைய 'பெடல்ஸ் சி2' என்ற வகை சைக்கிளையே முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்துகிறார். 120 கிலோ எடை வரை உள்ள நபர்கள் மட்டுமே இந்த சைக்கிளைப் பயன்படுத்த முடியும்.
250 வாட்ஸ் மோட்டார் (250 watt motor)
48 செ.மீ. நீளம் உள்ள சைக்கிளின் பிரேம் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளது. 7.0 ஏ.எச். லித்தியம் அயன் பேட்டரி உடைய 250 வாட்ஸ் திறன் உடைய மோட்டார் இந்த சைக்கிளில் பொருத்தப் பட்டுள்ளது.
7 கியர்கள் (7 gears)
7 கியர்கள் உடைய இந்த சைக்கிளை பெடல் செய்தால் மட்டுமே இயக்க முடியும். சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் பெடல் செய்வதை எளிமைப்படுத்துவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது.
பெடல்ஸ் செயலி (Pedals processor)
சைக்கிளின் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ள 'ஷாக் அப்சர்வ்ஸ் ஹைடிராலிக்' முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பெடல்ஸ் செயலி வாயிலாக இந்த சைக்கிளை இயக்க முடியும். எல்.சி.டி. திரை பொருத்தப்பட்டுள்ளது. சைக்கிளின் முன்புறம் பின்புறம் 25 எல்.யு.எக்ஸ். அளவு உடைய எல்.இ.டி. 'லைட்' பொருத்தப் பட்டுள்ளது.
மேலும் படிக்க...
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசக் கொரோனாத் தடுப்பூசி - தமிழக அரசு!
கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!
தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!