ஆடைகள் என்பது நம் அழகுக்கு மட்டுமல்ல, நம் உடலுக்கும் ஏற்றதாக, உடல் நலத்திற்கு உதவுவதாக இருக்க வேண்டும். அந்த வகையில், கோடை வெயில் வாட்டும் இந்த வேளையில், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காத ஆடைகளைத் தேர்வு செய்து அணிவதே நல்லது.
குளிர்ச்சி (Cooling)
அதேநேரத்தில் நாம் அணியும் ஆடையின் நிறமும், வெப்பத்தை வெளியேற்றி, உடலுக்குக் குளுமைத் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது பலரும் புதியத் தகவலாக இருக்கும். வெளியில் சென்றாலும், வீட்டிற்குள் இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் நம்மை வாட்டிக்கொண்டுதான் இருக்கும். இப்படியான சூழலில், நாம் அணியும் ஆடைகள் மூலம் சிறிதளவு குளிர்ச்சியை உணர முடியும்.
அக்னி வெயில்
அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த நாட்களில், பகல் வேளையில் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. எனவே வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து சருமத்தை காப்பதில், ஆடைகளின் வகை மற்றும் வண்ணங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.
வெளிர் நிறம் (Light colour)
கோடையில் வெளிர் நிற ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது மிக மிக அவசியம். ஏனெனில் இது உடலின் வெப்பத்தை எளிதில் வெளியேற்றும். வெளிப்புற வெப்பத்தை, உடல் அதிகமாக உட்கிரகிக்காமல் தடுக்கும். இதனால் உடலின் இயல்பான குளுமையை நம்மால் தக்கவைத்துக்கொள்ள முடியும். வெளிர் நிற ஆடைகள் கண்களுக்கு குளிர்ச்சியைத் தருவதுடன், வெப்பத்தால் ஏற்படும் எரிச்சலை நீக்கும்.
பருத்தி ஆடைகள் (Cotton dresses)
வெளிர் நிற சருமம் கொண்டவர்கள், பேஸ்டல் நிறங்களின் கலவையான டார்க்காய்ஸ், கேண்டி பிங்க், லெமன் யெல்லோ மற்றும் பெய்ஜ் போன்ற வண்ணங்கள் கொண்ட பருத்தி ஆடைகளை உடுத்துவது நல்லது.
அடர் நிறம் (Dark colour)
அடர் நிற சருமத்தினர், வெளிர் நிறங்களான இளஞ்சிவப்பு, லாவண்டர் புளூ, காட்டன் கேண்டி பேபி புளூ, இளந்தளிர் பச்சை, கிரீம் யெல்லோ, லிப்லாஸ் பிங்க், இளநீர் வெள்ளை மற்றும் டால்பின் கிரே போன்ற நிறங்களில் ஆடைகள் அணியலாம். தவிர, பருத்தி, லினன், ராயன், டிமின் போன்ற ஆடை வகைகளை கோடையில் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க...
முழு முட்டை Vs வெள்ளைக்கரு – எது ஆரோக்கியமானது?
நீரிழிவு நோயை தடுக்கும் பழைய சோறு - யாரும் அறிந்திராத உண்மை!