இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 2 April, 2022 9:48 AM IST

10த்தில் 5க்கும் மேற்பட்டோரை தற்போது நீரழிவு நோய் சகஜமாகத் தாக்குகிறது. குறிப்பாக இந்தியாவில் சுகர் எனப்படும் நீரழிவு நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக மருத்துவப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், செரிமாண பிரச்சினை, பசியின்மை, சளி இருமல் குமட்டல், உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முக்கிய மருத்துவ பொருளாக பயன்படும் கிராம்பைக் கொண்டு சர்க்கரை நோயை விரட்டியடிக்க முடியும்.

சமையலுக்கு மணம் மற்றும் சுவை மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் அளிப்பதில், நம்முடைய மசாலாப் பொருட்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. அந்த மசாலாக்களில் ஒன்றுதான் கிராம்பு. இந்த கிராம்பு, ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

செரிமாணத்திற்கு

பொதுவாக கிராம்பில் காணப்படும் கார்மினேடிவ் என்ற பண்பு, செரிமானம் மற்றும் வாயு பிரச்சினைகளுக்கு நன்மை தருகிறது. பல் வலி, பல்சொத்தை, வாய் துர்நாற்றம் உள்ளிட்ட வாய் சுகாதாரத்திற்கும் தீர்வளிக்க உதவுகிறது. தினமும் பருகும் டீயில், சிறிதளவு கிராம்பை தட்டி போட்டு குடித்தால் நெஞ்செரிச்சல், செரமாணப்பிரச்சினை, தலைவலி போன்ற பிரச்சினைகள் தீரும்.

குறிப்பாக இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கும் தன்மை கொண்ட கிராம்பு, உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. கிராம்பில் நீரிழிவு நோய்க்கான அழச்சி எதிர்ப்பு, வலி நிவாரணி, ஆண்டிசெப்டிக் போன்ற பண்புகள் அடங்கியுள்ளது. மேலும் செரியமானத்தை மேம்படுத்தும் பண்புகள் அதிகம் பெற்றுள்ளது. எனவே இன்சுலின் அளவை பராமரிப்பதில் கிராம்பின் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது.

கிராம்பு டீ

தேவையான அளவு தண்ணீரில் கொதிக்க வைத்து தண்ணீர் கொதிக்கும்போது அதில் சிறிதளவு கிராம்பை தட்டி போட்டு அதனுடன் டீத்தூள் சேர்த்து கொதிக்கை வைத்து கிராம்பின் வாசனை வரும்போது இறக்கிஅதனை வடிகட்டி குடிக்கலாம். இதை தினமும் செய்து வந்தாலே நீரிழிவு நோய்கை கட்டுப்படுத்த முடியும்.

அழகுக்கும்

மேலும் முகத்தில் முகப்பருக்கள் தழும்புகள், சரும பிரச்சினை உள்ளிட்டவற்றை போக்கவும், கிராம்பு பயன்படுகிறது.கிராம்பு எண்ணெயுடன் சிறிது தேன் மற்றும் ஒரு துளி சுண்ணாம்பு சேர்த்து நன்கு கலந்து முகப்பருக்களில் தேய்த்துவிட்டு காய்ந்ததும் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்ய பருக்கள் போகும். முகத்தில் அழகு சேரும்.

மேலும் படிக்க...

தினமும் 3 டம்ளர் பால் மட்டும்- அதிகரித்தால் இத்தனைச் சிக்கல்கள்!

ஐஸ் வாட்டர் குடித்தால் இதயத் துடிப்பு குறையும்- நிபுணர்கள் எச்சரிக்கை!

English Summary: Clove beats sugar!
Published on: 02 April 2022, 09:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now