நாம் சிலரை செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து உபயோகிப்பதை பார்த்திருப்போம்.ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் சாதாரண தண்ணீரை விட செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீர் உடலுக்கு எத்தனை பயனுள்ளது என்று. உங்களில் குறைந்த அளவான மக்களுக்கு மட்டும் தான் தெரிந்திருக்கும் செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீரை அருந்துவது எத்தனை பயனுள்ளது என்று. வாருங்கள் பார்ப்போம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் செம்பு பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரின் நன்மைகள்:
காப்பரின் பற்றாக்குறையை நீக்குகிறது
நம் உடலுக்கு சில முக்கிய சத்துக்கள் தேவை படுகின்றன. அந்த சத்துக்கள் நம் குடிக்கும் தண்ணீரில் அடங்கியுள்ளது. சில சமயம் உணவு உட்கொண்ட பிறகும் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பத்திலை, எடுத்துக்காட்டு காப்பர் பற்றாக்குறை, உங்கள் உடலில் காப்பரின் பற்றாக்குறை இருந்தால் நீங்கள் கண்டிப்பாக செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீரை குடிக்கவேண்டும். இதனால் உடலில் ஏற்படும் பாக்டீரியாவை நீக்கிவிடுகிறது.
எதிர்ப்பு சத்தி :
உடலில் வலி, வீக்கம், சோர்வு அடிக்கடி ஏற்படும் பிரச்சனை இருந்தால் நீங்கள் கண்டிப்பாக இந்த செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீரைக் குடிக்க வேண்டும். இது உடலில் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் புற்று நோய் எதிர்ப்பதற்கு மிகவும் சிறந்து விளங்குகிறது.
வயிற்று கோளாறுகள்:
உங்களுக்கு வயிற்று சம்பத்தப்பட்ட பிரச்சனைகள் இருத்தல் செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீர் சிறந்த தீர்வு அளிக்கிறது. மலச்சிக்கல், ஜீரண கோளாறு, அசிடிட்டி, போன்ற பிரச்சனைகளில் இருந்து தீர்வு அளிக்கிறது. இந்த
தண்ணீர் உங்களின் வயிற்று, குடல், சிறுநீரகம் சார்ந்த கோளாறுகளை குணப்படுத்த உதவுகிறது.
வீட்டில் யார் வேண்டுமானாலும் இந்த செம்பு பாத்திர தண்ணீரை குடிக்கலாம். இதனால் உடலில் எதிர்ப்பு சத்தி அதிகரிப்பதோடு ஆரோக்கியமும் கூடுகிறது. உங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு தினமும் இந்த தண்ணீர் கொடுத்து வந்தால் சிறந்த உடல் ஆரோக்கியம் மேம்படும்.