எதிர்பார்த்தபடி கொரோனா 3-வது அலை மோசமானதாக இருக்காது என எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
கொலைகாரக் கொரோனா (The killer corona)
இந்தியாவின் பல மாநிலங்களிலும் படிப்படியாக மக்களைப் பதம்பார்த்து வருகிறது கொடூரக் கொரோனா வைரஸ். இந்த வைரஸின் முதல் அலையை விட 2-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து கொரோனா 3-வது அலை மோசமான இருக்கும் எனவும், குறிப்பாகக் குழந்தைகளைத் தாக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே கொரோனா 3-வது அலை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்வி நிறுவனம் சாா்பில் நடைபெற்ற விழாவில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் இயக்குநா் ரந்தீப் குலேரியாவிற்கு விருது வழங்கப்பட்டது.
கொரோனா 3-வது அலை (Corona 3rd wave)
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், கொரோனா பெருந்தொற்றின் பரவல், இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க முடியவில்லை. இருப்பினும், 2-வது அலையைப் போன்று 3-வது அலை மோசமானதாக இருக்காது. 3-வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவாா்கள் என்ற பொதுவான அச்சம் நிலவுகிறது.
ஏனெனில், பெரியவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். குழந்தைகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.
ஏற்கனவே 50 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகளை கொரோனாத் தொற்று தாக்கியதாக செரோ ஆய்வு முடிவு கூறுகிறது
விரைவில் தடுப்பூசி (Vaccinate soon)
இன்னும் ஓரிரு மாதங்களில் குழந்தைகளுக்கான தடுப்பூசி கிடைத்துவிடும். அதன்பிறகு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும்.
மரணத்தில் இருந்து தப்பிக்க (Escape from death)
தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் கொரோனா தொற்று ஏற்பட்டால், அது தீவிரமான பாதிப்பாக இருக்காது. கொரோனா தொற்று தாக்கினாலும், மரணத்தில் இருந்து தடுப்பூசி காப்பாற்றுகிறது.
தடுப்பூசி அவசியம் (Vaccination is essential)
இப்போதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களே. அதனால்தான் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தொடா்ந்து கூறுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும்- குடியரசு தலைவர் வலியுறுத்தல்!
தீவிரம் அடையும் கொரோனா 3-வது அலை- பெங்களூரில் 10 நாளில் 500 குழந்தைகளுக்குத் தொற்று!