மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 August, 2021 6:22 PM IST
Credit : Dinamalar

கல்லீரல் கோளாறுகள், முறையான சிகிச்சையால் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம் (High Blood Pressure) போன்ற இணை நோயாளிகள் தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசி போட்டவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டாலும், மிதமான அறிகுறிகள், பாதிப்புகளுடன் சரியாகிவிடுகிறது என்பது உறுதியாகி விட்டது.

தடுப்பூசியே பாதுகாப்பு

வைரஸ் தொற்றின் துவக்கத்தில் இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தன. இது மாறி, இரண்டாம் அலையின் போது வயிற்றுப் போக்கு உட்பட செரிமானப் பிரச்னைகள் அறிகுறிகளாக வெளிப்பட்டன. அலையிலும் கொரோனா தொற்றின் அறிகுறிகள் மாறி வருகின்றன. தடுப்பூசி மட்டுமே நம் முன் தற்போது உள்ள ஒரே பாதுகாப்பு.

கொரோனாவிற்குப் பின்

கொரோனா பாதிப்பு சரியாகி, அதிகபட்சம் ஆறு மாதங்களுக்கு பின், சிலருக்கு மிதமாகவும், பலருக்கு தீவிர பாதிப்பாகவும் மஞ்சள் காமாலை வருகிறது.
50 வயதிற்கு உட்பட்டவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மஞ்சள் காமாலை தொற்றை ஏற்படுத்தும் வழக்கமான காரணிகள் எதுவும் இவர்களிடம் இல்லை என்று பரிசோதனையில் உறுதி ஆனது. அதன்பின் செய்த கொரோனா பரிசோதனையில், அறிகுறிகள் இல்லாமலோ, மிதமான அறிகுறிகளுடனோ கொரோனா இருந்து சரியானது தெரிய வந்தது. இதன் விளைவாகவே கல்லீரல் திசுக்கள் பாதித்து, மஞ்சள் காமாலை வந்துள்ளது. நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் இது போன்ற பாதிப்பு உள்ளதாக ஆய்வறிக்கைகள் வருகின்றன.

ஹெபடைடிஸ்

வைரஸ் பாதித்த பின் ஏற்பட்ட மஞ்சள் காமாலையால் கல்லீரல் முற்றிலும் செயலிழப்பதும் அரிதாக உள்ளது. வைரஸ் தொற்று ஏற்பட்டு, சரியான பின், ஒரு மாதம் கழித்து, கண்களில் மஞ்சள் நிறம், சிறுநீர் மஞ்சளாக போவது, சோர்வு, எடை குறைவு, பசியின்மை, வெள்ளை நிற மலம் போன்ற மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் தெரிந்தால், பாதிப்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்வது அவசியம். 

'ஹெபடைடிஸ் ஏ - எப்' வரை, பல்வேறு வகையான வைரஸ்கள் கல்லீரலை பாதிக்கும். இவை கல்லீரலில் சென்று தங்கி, பல்கி பெருகி, கல்லீரல் செல்களை அழிக்கும். இதன் காரணமாக வருவது மஞ்சள் காமாலை. கல்லீரலில் ரத்த உறைவை கொரோனா வைரஸ் ஏற்படுத்துவதில்லை. ஆனால், வைரஸ் பாதித்ததால் ஏற்பட்ட பின்விளைவு இது. கொரோனா பாதிப்பில் இருந்து வெளியில் வந்தவர்களுக்கு இது போன்ற அறிகுறிகள் இருந்தால், டாக்டரின் ஆலோசனை இல்லாமல், கீழாநெல்லி போன்ற மூலிகைகளை தாங்களாகவே சாப்பிடாமல், மருத்துவ சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

டாக்டர் ஜாய் வர்கீஸ்,
இயக்குனர்,
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு,
குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னை.

மேலும் படிக்க

கண்கள் இரண்டும் சோர்வடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

வியக்க வைக்கும் வேப்பம்பூவின் அரிய பயன்கள்!

English Summary: Corona damages to liver tissue! Needs Attention!
Published on: 04 August 2021, 06:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now