Health & Lifestyle

Thursday, 20 January 2022 09:07 AM , by: Elavarse Sivakumar

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இப்போதைக்கு முடிவுக்கு வராது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். கொரோனா எனப்படும் கோவிட் பாதிப்பு எப்போது முடிவுக்கு வரும் என்பதைத் தெரிந்துகொள்ள  உலகமக்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்த நேரத்தில், சர்வதேச அமைப்பின் இந்த அறிவிப்பு உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

எப்போது விடைபெறும்? (When to say goodbye?)

உலக நாடுகளில் கொரோனா வைரஸின் 3-வது அலை, பல அடி ஆழத்திற்கு அழுத்தமாக நங்கூரம் போட்டதுபோலக் குறிப்பாக யாரும் எதிர்பார்க்காத வகையில், தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக, இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளின் மக்கள் மனதில் தற்போது எழுந்துள்ள பொதுவான ஒரு கேள்வி என்ன தெரியுமா?

எப்போதுதான் கொரோனா நம்மிடம் இருந்து விடைபெறும் என்பதுதான். உறவுகளை இழந்துப் பரிதவிக்கும் நபர்கள் ஒருபுறம், கொரோனா பாதிப்பால் உயிர்பிழைத்தாலும், ஆரோக்கியத்தை இழந்துவிட்டு, அதை அடையப் பல மாதங்கள் போராடும் மக்கள் மறுபுறம், இவ்வாறாகக் கொரோனா ஏற்படுத்தியுள்ளத் தாக்கங்கள் ஏராளம்.

முடிவு கிடையாது (Not ends)

இது குறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், ஜெனீவாவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பெருந்தொற்று இப்போதைக்கு முடிவுக்கு வராது. ஒமிக்ரானுக்குப் பிறகும் புதிய தொற்றுகள் வர வாய்ப்பு உள்ளது.
ஒமிக்ரான் வேண்டுமானால் தீவிரம் குறைந்ததாக இருக்கலாம். ஆனால் இது லேசான நோய் என்று சொல்வது தவறாக வழிநடத்துகிறது. ஒமிக்ரானும் மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்க்கைக்கு காரணமாகிறது. உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

முதல் கட்டத்தில் (In the first stage )

இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக உலக பொருளாதார மன்றத்தில் அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஆண்டனி பாசி பேசுகையில் கூறியதாவது:-
கொரோனா தொற்றின் முதல் கட்டத்தில்தான் உலகம் இன்னும் உள்ளது. உலகம் முழுவதும் உண்மையில் மிகவும் எதிர்மறையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கணிக்க முடியாது (Unpredictable)

ஒமிக்ரான் தொற்றை பொறுத்தமட்டில் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியில் மிகப்பெரிய பக்கவிளைவை ஏற்படுத்த முடியும். ஒமிக்ரான் என்பது  இந்தக் கொரோனா வைரஸிற்கான நேரடி தடுப்பூசியாக இருக்கப்போகிறதா என்றால் இது ஒரு திறந்த கேள்வி. ஏனென்றால் புதிய புதிய உருமாற்றங்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே கொரோனாப் பெருந்தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்பதை இப்போதே கணித்துக் கூறி விட முடியாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க...

10 நாட்கள் தனிமைப்படுத்துதல் போதாது - புதிய ஆய்வில் தகவல்!

கொரோனா 3வது அலை எப்போது Endcard போடும்? நிபுணர்கள் விளக்கம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)