மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 June, 2021 5:01 PM IST
Lavangam

உணவில் நறுமணத்திற்காக கிராம்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த கிராம்பிலும் அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்று கூறினால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த கிராம்பு பாரம்பரியமாக சீன மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிராம்பு மரத்தில் உள்ள பூக்களின் உலர்ந்த மொட்டுகளை பயன்படுத்தி வருகிறோம். இந்த கிராம்பு குக்கீஸ், பானங்கள், வேக வைத்த பொருட்கள், சுவையான உணவுகள் போன்ற பல உணவுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக பிரியாணியில் இதற்கு தனி இடம் உண்டு.

இந்தக் கிராம்பில் ஆக்சிஜனேற்றம், நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகம் நிறைந்துள்ளன. இவை இந்த கிராம்பில் உள்ள ஆரோக்கிய நலன்களுக்கு முக்கிய பங்கு அளிக்கிறது. 100 கிராம் கிராம்பில் 286 கிலோ கலோரி ஆற்றல் உள்ளது. மேலும் இதில் 4.76 கிராம் புரதம், 14.29 கிராம் கொழுப்பு, 66.67 கிராம் கார்போஹைட்ரேட், 33.3 கிராம் நார்சத்து, 476 மி.கி கால்சியம், 8.57 மி.கி இரும்பு சத்து, 190 மி.கி மெக்னீசியம், 1000 மி.கி பொட்டாசியம், 286 மி.கி சோடியம் ஆகியவை நிறைந்துள்ளன.

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் -சி மற்றும் ஏ† போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது

பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக கருதப்படுகிறது. பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி. உடலைப் பருமன் அடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது. ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது மேலும் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் குமட்டல் வாந்தி போன்றவை நிற்கும். கிராம்பில் உள்ள ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது. நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா நோய் குணமடையும். கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

தற்போது கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு ஸ்தம்பித்துப் போயுள்ளது. இந்நோயில் இருந்து தப்பிக்க முக்கிய வழி மற்றும் கிராம்பில் கொரோனவிற்கான  நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுகிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்பு இந்த கிராம்பில் அதிகமாக உள்ளது. இந்தக் கிராம்பில் உள்ள வைட்டமின் சி, நீரில் கரையக்கூடிய ஒரு ஆக்ஸிஜனேற்ற பண்பு உடையது. இது நோய் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி சீரான நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு உதவுகிறது.

மேலும் படிக்க:

மருத்துவ குணங்கள் நிறைந்த இலவங்க பட்டை

அன்றிலிருந்து இன்றுவரை! நறுமணப் பயிர்களுக்கு ஓர் தனி மவுசு

English Summary: Covid 19 prevention here is the truth about cloves
Published on: 26 June 2021, 04:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now