உடல் நலத்தின் மீது அக்கறை கொண்டுள்ள அனைவருமே, உடல் எடையைக் குறைக்கப் பலவழிகளில் முயற்சிக்கிறார்கள். இவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒரு கிலோ எடையைக் குறைத்தால் கோடி ரூபாய் பரிசு என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, உடல் எடையை ஒரு கிலோ குறைத்தால் ரூ.1,000 கோடி தொகுதி வளர்ச்சி நிதி வழங்கப்படும் என எம்.பி.க்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவுரை வழங்கி உள்ளார்.
125 கிலோ எடையுடன் இருந்த அனில் பிரோஜியா தனது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அனில் பிரோஜியா உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து வருகிறார்.
அமைச்சர் உறுதி
மத்தியபிரதேச மாநிலம் மால்வா பகுதியில் சாலை திட்டங்களுக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார்.
ரூ.1000 கோடி நிதி
அப்போது, மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜயினி மக்களவை தொகுதியின் பா.ஜ.க. உறுப்பினர் அனில் பிரோஜியாவிடம், உடல் எடையை குறைத்தால், ஒவ்வொரு கிலோ எடை குறைவுக்கும் ரூ.1000 கோடி தொகுதி வளர்ச்சி நிதி வழங்கப்படும் என நிதின் கட்கரி நகைச்சுவையாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு கிலோ எடை குறைவுக்கும் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும் கட்காரி கூறியிருக்கிறார்.
இதையடுத்து 125 கிலோ எடையுடன் இருந்த அனில் பிரோஜியா தனது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தினமும் உடற்பயிற்சி, யோகா, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் உள்ளிட்ட செயலில் ஈடுபட்டு 6 கிலோ எடையை குறைத்தார். இதற்காக 2 மணி நேரம் செலவிடுகிறார். அத்துடன் உணவு கட்டுப்பாட்டையும் கடைபிடித்து வருகிறார்.
இது குறித்து எம்பி கூறும்போது, "மத்திய அமைச்சர் நிதின்கட்கரியின் அறிவுரைப்படி உடல் எடையை குறைத்து வருகிறேன். இதுவரை ரூ.6 ஆயிரம் கோடி நிதி பெற்றுள்ளேன். மழைக்கால பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது அவரை சந்தித்து, வாக்குறுதியை நிறைவேற்றுமாறு நினைவுப்படுத்த உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...