கொட்டும் மழைதான், வெளியே செல்லவிடாமல் நம்மை வீட்டில் முடக்கிவிடுகிறது என்றால், கோடை வெயில், அதைவிட அதிகமாக, நம்மை அணு அணுவாக பதம்பார்க்கிறது என்றே சொல்லலாம். அந்த வகையில் வாட்டி வதைக்கிறது வறண்ட வெயில். இந்த வெயிலிடம் இருந்து லாவகமாகத் தப்ப வேண்டுமா? அப்படியானால் உங்களுக்கு இந்தத் தகவல் உதவும்.
பருவகால மாற்றத்தால் வாட்டி வதைக்கும் கோடை வெப்பத்திற்கு, அருமருந்தாக அனைவரும் வாங்கக்கூடிய விலையில் தென்மாவட்டங்களில் பேருந்து நிலையங்கள் அருகே விற்பனை செய்ய படும் காய் வெள்ளரி. ஐந்தே மாதங்களில் அமோக விளைச்சல் தரக்கூடிய இயற்கையின் அற்புத படைப்பு வெள்ளரி.
பொதுவாக நாட்டு ரகங்கள் கண்மாய் உள்வாயில் பகுதியிலும் வயல் மற்றும் தோட்டக்கால் பகுதியிலும் சாகுபடி செய்யப்படுகின்றன. அவ்வாறு அறுவடை செய்யப்படும் வெள்ளரி, பிஞ்சாக, காயாக, பழமாக பலவிதங்களில் விற்பனை செய்ய படுகின்றது.
இதன் தாயகம் இந்தியா தான் ஆனால் உலகிலேயே வெள்ளரிஉற்பத்தியில் முதலிடம் வகிப்பது சீனா தான். இதன் அறிவியல் பெயர் " குக்குமிஸ் சட்டைவஸ். இது கொடி வகை தாவரம். 96சதவிகிதம் நீர் சத்து நிறைந்த சதைபற்று உள்ள காயாகும்.தாது உப்புகள், வைட்டமின் கள், நார்சத்து உள்ளிட்டவை நிறைந்த காயாகும்.
உடல் நலத்திற்கு தேவையான அனைத்து சத்துகளும் வெள்ளரியில் உள்ளதால், தினமும் ஓரு வெள்ளரி பிஞ்சு அவசியம் சாப்பிட வேண்டும் என்று இயற்கை மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.அந்த அந்த பருவத்தில் விளைகின்ற காய்கனிகள் அந்த அந்த சிதோஷ்ண நிலைக்கேற்ப உண்ண வேண்டும் என்பது சித்த,ஆயுர்வேத மருத்துவத்தின் கோட்பாடாக உள்ளது எனவே இந்த கோடையில் எளிதாக நீர் சத்து நிறைந்த தர்பூசணி, நுங்கு, மாம்பழம் கொடிக்காபுளி போன்ற பழங்களை உண்ண வேண்டும்.
தற்போது பசுமை குடில் வாயிலாக வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அரசின் மானிய உதவியும் கிடைக்கும். கோடையின் வெப்பத்தை தணிக்கும் வெள்ளரி காய்,பிஞ்சு,பழம் உள்ளிட்டவற்றை வாங்கி உண்போம். உடல் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாப்போம்.
தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
மேலும் படிக்க...