Health & Lifestyle

Sunday, 20 February 2022 09:28 PM , by: Elavarse Sivakumar

இயந்திரமயமாகிவிட்ட வாழ்க்கையில், உடல் எடை என்பது, தற்போது சிறுவர் முதல் பெரியவர்கள் வரைத் தீராதப் பிரச்னையாக உருமாறிவிட்டது.
எனவே உடல் எடையைப் பராமரிப்பதோடு மட்டுமல்லாமல்,செரிமானப் பிரச்னைக்கும் தீர்வு தருகிறது. ஏனெனில், மசாலா மற்றும் மூலிகைகள் உணவுகளுக்குச் சுவையைச் சேர்ப்பது மட்டுமல்லாமல், அவை எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. 

எடைக் குறைப்புக்கு உதவுவது முதல் செரிமான பிரச்சனைகளைத் தடுப்பது வரை, பல சமையலறை மசாலாப் பொருட்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகின்றன. எனவே நம் ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்ள, கூடுதலாக சில சத்தானப் பொருட்கள் வாங்கிப் பயன்படுத்துவதற்கு பதிலாக, நம் சமையலறையில் உள்ள பொருட்களையேப் பயன்படுத்தலாம்.

அப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு இருந்தால், காலையில் எழுந்ததும் முதலில் சீரகத் தண்ணீரைக் குடிக்கலாம். இது ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது, வீக்கத்தைத் தடுக்கிறது மற்றும் எடையைக் குறைக்க உதவுகிறது.

சீரக நீரின் நன்மைகள்

  • கலோரிகள் குறைவு

  • செரிமானத்திற்கு உதவுகிறது

  • வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது

  • உடலை நச்சு நீக்குகிறது

  • அழற்சி எதிர்ப்பு நன்மைகளை வழங்குகிறது

  • நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது

தயாரிப்பது எப்படி?

  • ஒரு டம்ளரில் தண்ணீர் சேர்த்து, அதில் சிறிதளவு சீரக விதைகளை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

  • காலையில் எழுந்ததும் தண்ணீரை வடிகட்டி, அதில் சூடான நீரைச் சேர்த்துப் பருகவும்.

எப்படி உதவுகிறது?

நீண்ட நேரம் ஊறவைப்பதால், சீரக விதைகள் வீங்கி, பயோஆக்டிவ் கலவைகளைத் தண்ணீரில் வெளியிடுகின்றன. சீரகம் இரத்த குளுக்கோஸின் அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கவும் பல வகைகளில் உதவுகிறது. சீரகம் உங்கள் செரிமானத்திற்குச் சிறந்தது, நச்சுகளை நீக்குகிறது மேலும், நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், சீரக தண்ணீரை விட சிறந்தது எதுவுமில்லை!

தகவல்
மிஷா அரோரா
ஊட்டச்சத்து நிபுணர்

மேலும் படிக்க...

வெண்ணெயில் ஸ்டார்ச் கலப்படம்- கண்டுபிடிப்பது எப்படி?

மனைவியைக் கொன்றுக் கூறுபோட்டு சமைத்துத் தின்றக் கணவன்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)