தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தீவிரமாகக் கட்டுப்படுத்த ஏதுவாக தளர்வில்லா ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கலாம் என அரசுக்கு மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது.
7ம் தேதி வரை ஊரடங்கு (Curfew until the 7th)
கடந்த மாதம் 10ம் தேதி முதல் அமலில் உள்ள முழு ஊரடங்கு சிலத் தளர்வுகளுடன் படிப்படியாக ஜுன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று அனைத்து மாவட்டங்களிலும் குறையத் தொடங்கி உள்ளது.
குறையும் பாதிப்பு (Decreased vulnerability)
சென்னை நகரைப் பொறுத்தவரையில் 7 ஆயிரமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, தற்போது 2 ஆயிரமாக குறைந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் இதே நிலையே உள்ளது.
தொடர்ந்து அதிகரிப்பு (Continuing increase)
எனினும் கோவை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருப்பூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகமாகி வந்தது. கோவையைப் பொறுத்தவரையில் சென்னையையும் தாண்டி திடீரென கொரோனா பாதிப்பு உச்சத்துக்கு சென்றது.
பாதிப்புக் குறைந்தது (The impact is minimal)
ஆனால் இப்போது அந்த மாவட்டங்களிலும் கணிசமாகக் குறையத் தொடங்கியது. கோவையில் 4 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த தினசரி பாதிப்பு தற்போது 2,900 ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஒரு வாரம் நீட்டிப்பு (One week extension)
இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மருத்துவர்கள் குழு பரிந்துரை (Recommended by the panel of physicians)
இதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் எனவும், குறைவான பாதிப்பு உள்ள மாவட்டங்களுக்குத் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க...
ஊரடங்கிலும் வேளாண் பொருள் ஏற்றுமதியில் உச்சத்தைத் தொட்ட இந்தியா!
இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிக்க இ-பதிவு கட்டாயம்!