இந்தியர்கள் உட்பட உலக மக்களை அதிகம் தாக்கும் நோய்களில் சர்க்கரை எனப்படும் நீரிழிவு நோயும் ஒன்று. இதில் சில வகைகள் இருப்பினும், இந்த நோய் நம் உடலின் சக்தியை இழக்கச் செய்து, பலவீனமானவர்களாக மாற்றிவிடுகிறது.
விடுபட
ஆனால், இந்த நோயில் இருந்து விடுபட, நம் சமைலறையில் உள்ள வெந்தயமே மிகச்சிறந்தது என்பதை பல ஆய்வுகள் உறுதி செய்கின்றன. வெந்தயத்தை நாம் ஊறுகாய் செய்வதற்கு, பல விதமான நமது உணவுகளிலும் சேர்த்து சாப்பிடுவோம். இதில் பல்வேறு சத்துகள் இருக்கிறது. இது சர்க்கரை நோய்க்கு தீர்வாக இருக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
ஓடிப்போகும்
குறிப்பாக, நம் சமையலறைப் பொக்கிஷமான வெந்தயத்தை தினமும் வெந்நீரில் ஊறவைத்து சாப்பிட்டால், சுகர் ஓடிப்போகும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.2015-ம் ஆண்டு சர்வதேச ஊட்டசத்து தொடர்பான ஆய்வு இதழ் நடத்திய ஆய்வில் தினமும் 10 கிராம் வரை வெந்தயத்தை சுடு நீரில் ஊறவைத்து சாப்பிட்டால், டைப் 2 டயபடிஸ் நோய்க்கு தீர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஊறவைத்து
இந்நிலையில் வெந்தயம் எப்படி சாப்பிட வேண்டும் முக்கிய வழிமுறைகள் உள்ளன. வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, அடுத்தநாள் நீரில் சுட வைத்து அந்நீரை குடிக்கலாம். முடிந்தால் அந்த விதைகளை சாப்பிட முயற்சி செய்யுங்கள். பிசிஓஎஸ் , சர்க்கரை நோய்க்கு இது தீர்வாக இருக்கும்.
முளைகட்டி
வெந்தயத்தை முளைகட்ட வைத்து, அதை சாலட், பராத்தா, சான்விஞ்சில் சேர்த்து சாப்பிடலாம். பொடி செய்த வெந்தயத்துடன், பாகற்காயின் விதைகளை சம அளவில் பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
மேலும் படிக்க...