தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத வகையில், 27 ஆயிரத்தை நெருங்கியிருக்கிறது. பல்வேறுக் கட்டுப்பாடுகளை அரசி விதித்துள்ள போதிலும், கொரோனா வைரஸ் தொடர்ந்து தன் ஆட்டத்தைக் காட்டி வருகிறது. இதையடுத்து, மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
3-வது அலை (3rd wave)
கடந்த 2 ஆண்டுகளாக நம்மை ஆட்கொண்டுவரும் கொரோனா அரக்கன், இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது 3-வது அலையாக வந்துகொண்டிருக்கிறார். ஒமிக்ரானைக் கண்டு மக்கள் ஓட்டம் பிடித்த நிலைநில், 3-வது அலையாக வலம் வரும் கொரோனா பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய உச்சம் (New peak)
அதிலும் இந்த வாரம் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு என அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தபோதிலும் கட்டுப்பட மறுக்கிறது கொரோனா வைரஸ் பாதிப்பு.
26,981
இந்நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் ஜனவரி 19ம் தேதி மட்டும் 26,981 பேருக்கு கோவிட் உறுதி செய்யப் பட்டு உள்ளது. 35 பேர் உயிரிழந்துள்ளனர். 17,456 பேர் குணமடைந்து உள்ளனர். 18ம் தேதி 23,865 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் மறுநாளில் பாதிப்பு 26,981 ஆக சற்று அதிகரித்துள்ளது.
இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,14,235 ஆக அதிகரித்து உள்ளது.இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 17,60,772 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 12,53,425 ஆகவும் அதிகரித்து உள்ளது.17,456 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,06,501 ஆக உயர்ந்துள்ளது.
35 பேர் பலி (35 people dead)
35 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,073 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,305ல் இருந்து, 8,007ஆக சற்று குறைந்துள்ளது.
மேலும் படிக்க...
10 நாட்கள் தனிமைப்படுத்துதல் போதாது - புதிய ஆய்வில் தகவல்!
கொரோனா 3வது அலை எப்போது Endcard போடும்? நிபுணர்கள் விளக்கம்!