நாம் செய்வதிலேயே மிகச்சிறந்த மற்றும் எளிதான உடற்பயிற்சி என்றால் அது நடைபயிற்சிதான். எனவே நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 நிமிடங்களுக்கு மேல் நடப்பது இதய ஆரோக்கியம் மற்றும் நுரையீரல் திறனை மேம்படுத்த ஒரு சிறந்த வழியாகும்.
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி,நடைபயிற்சி, யோகா உள்ளிட்டவை நிச்சயம் கைகொடுக்கும். அதில் தினமும் நாம் செய்யக்கூடிய, அதேநேரத்தில் மிகவும் எளிதான ஒரு பயிற்சி என்றால், அது நடைபயிற்சிதான். அதற்காக ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. சிறிய வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் நீங்கள் எப்பொழுதும் உடற்பயிற்சி பயணத்தைத் தொடங்கலாம். அத்துடன் உங்கள் தினசரி வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக நடைபயிற்சியை இணைக்கலாம்.
அசத்தலான 8 நன்மைகள்
உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்க, நடைப்பயிற்சி சிறந்த வழியாகும். உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மன ரீதியாகவும் நன்மைப் பயக்கும்.
-
மூளையைக் கூர்மையாக்கும்.
-
சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
-
இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை மேம்படுத்துகிறது.
-
சூரிய ஒளி படுவதன் மூலம் உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கிறது.
-
மூட்டுகளைத் தாங்கி நிற்பதுடன், தசைகளையும் பலப்படுத்துகிறது.
-
இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் எண்டோர்பின்களை (உடலின் இயற்கையான வலி நிவாரணிகள்) வெளியிடுகிறது
-
மனநிலை மற்றும் ஆற்றல் அதிகரிக்கும்
எனவே ஒரு நாளைக்கு 25 முதல் 30 நிமிடங்களுக்கு மேல் நடப்பது இதய ஆரோக்கியம் மற்றும் நுரையீரல் திறனை மேம்படுத்தமுடியும்.
தகவல்
மினாச்சி பெட்டுகோலா
ஊட்டச்சத்து நிபுணர்
மேலும் படிக்க...
வெள்ளரிக்காய் சாப்பிட்டால், இத்தனைப் பக்கவிளைவுகள்!
சளியைத் துவம்சம் செய்யும் கற்பூர வல்லி- வீட்டில் வளர்ப்பதும் சுலபம்!