Health & Lifestyle

Sunday, 30 January 2022 11:28 AM , by: Elavarse Sivakumar

நெஞ்சு எரிச்சல், அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதைப் பழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இதைத்தவிர சிலருக்கு, எப்போதுமோ சூடான தண்ணீரைக் குடிப்பதேப் பிடிக்கும். இந்தப்பழக்கம் உங்களுக்கும் இருந்தால், இந்தத் தகவல் உங்களுக்குத்தான்.


சீரான வளர்சிதை மாற்றம், ஒளிரும் சருமம் மற்றும் நன்கு செயல்படும் சிறுநீர் அமைப்பு ஆகியவற்றிற்கு வெதுவெதுப்பான நீரை அவ்வப்போது உட்கொள்வது அவசியம் என்று எப்போதும் போதிக்கப்படுகிறது. குறிப்பாகக் கோவிட்-19 (Covid-19) தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, வெதுவெதுப்பான நீரை அருந்துவது, கிட்டத்தட்ட அனைத்து குடும்பங்களிலும் ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் பல நன்மைகள் உள்ள போதிலும், போதிய எச்சரிக்கை இல்லாமல், இதை நாம் அளவுக்கு அதிகமான எடுத்துக்கொண்டால், பல பக்கவிளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

பக்கவிளைவுகள்

சிறுநீரக பாதிப்பு

அதிகப்படியான வெதுவெதுப்பான நீர் சிறுநீரகத்தின் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதிக அளவு வெதுவெதுப்பான நீர் அவற்றின் செயல்பாட்டைத் தடுக்கிறது. நமது சிறுநீரகங்கள் நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றன. நமது சிறுநீரகங்களுக்கு தண்ணீர் (Water) இருப்பது முற்றிலும் அவசியம் என்றாலும், அதிகப்படியான சூடு அல்லாமல் சாதாரண தண்ணீரை அவ்வப்போதும், வெதுவெதுப்பான நீரை இடைவெளி விட்டும் அருந்துவது நல்லது. இதன் மூலம் உங்கள் சிறுநீரகத்துக்கு நண்பனாக இருக்கும் நீர் எதிரியாக மாறாமல் பார்த்துக்கொள்ளலாம்.

இரத்த அழுத்தம்

வெந்நீரை அதிகம் குடிப்பது உடலின் இரத்த அளவை அதிகரிக்க வழிவகுக்கும். இது இரத்த ஓட்டம் மற்றும் அழுத்தத்தில் அடிகப்படியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

செரிமான பிரச்சனைகள்

வயிறு சூடாக இருப்பது உடல் நலனுக்கு நல்லதல்ல. அதாவது வெந்நீரை அதிகளவில் அருந்துவது உணவை ஜீரணிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும். ஏனெனில் அது உடல் வெப்பநிலையை அதிகரிக்கிறது. மேலும் செரிமான பிரச்சினைகளை தூண்டிவிடுகிறது.

அதிக அசுத்தம்

தற்போதையக் சூழ்நிலையில், நாம் அருந்தும் நீரின் தரம் ஒரு கவலைக்குரிய விஷயமாக உள்ளது. குறிப்பாக, நீர் சூடாக இருக்கும்போது, ​​அது மாசுபடுவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகரித்து விடுகின்றன. ஏனெனில், குளிர்ந்த நீரை விட வெதுவெதுப்பான நீர் அசுத்தங்கள் மற்றும் நச்சுகளை எளிதில் கரைக்கின்றன.

இதனால், இதில் மாசுபாட்டின் அளவும் அதிகரிக்கிறது. சூடான அல்லது வெதுவெதுப்பான நீரை (Warm Water) நாம் அதிகம் உட்கொள்ளும் போது, நம் உடலுக்குள் செல்லும் மாசுபாட்டின் அளவும் அதிகரிக்கிறது.

மேலும் படிக்க...

நாடு முழுவதும் இன்று முதல் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

ஒமிக்ரான் வேகமாக குறையும்: அமெரிக்க அறிவியலாளர் நம்பிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)