Health & Lifestyle

Friday, 09 July 2021 12:06 PM , by: Sarita Shekar

papaya

பப்பாளி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பழமாகும். பப்பாளி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்பதை நிரூபிக்கிறது. உடலில் ஏற்படும் வயிறு தொடர்பான  சில பிரச்சினைகளிலிருந்து விடுபட பப்பாளி சாப்பிடலாம். அதன் இனிப்பான சுவையைத் தவிர, பல ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. பப்பாளி பழத்தில் வைட்டமின்கள் ஏ, பி, டி, கால்சியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது.

பெரும்பாலான மக்கள் பப்பாளியை உட்கொள்கிறார்கள், இதில் பல இரகமான வகை பழங்கள் உள்ளன. ஆனால் சில விஷயங்களை பப்பாளியுடன் சாப்பிடக்கூடாது என்பது நம்மில் பலர் அறிவதில்லை. இல்லையெனில், பயனடைவதற்கு பதிலாக, அது தீங்கு விளைவிக்கும். பப்பாளியுடன் உட்கொள்ளக் கூடாத சில உணவு பொருட்களை காணலாம்.

தயிர் (Yogurt)

பப்பாளி மற்றும் தயிரை ஒருபோதும் ஒன்றாக சாப்பிடக்கூடாது. இந்த இரண்டு பொருட்களின் விளைவு வேறு விதமாக இருக்கும். தயிர் குளிர்ச்சி தன்மை கொண்டது, பப்பாளி சூடான தன்மை கொண்டது. இந்த காரணத்திற்காக, இந்த இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

எலுமிச்சை (Lemon)

பப்பாளி மற்றும் எலுமிச்சை ஒன்றாக உட்கொள்வது உடலுக்கு ஆபத்தானது. இந்த இரண்டையும் ஒன்றாக உட்கொள்வது இரத்த சோகைக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

ஆரஞ்சு (Orange)

பழ சாட்டில்(fruit chat) அதாவது சாலட்டில் பப்பாளியுடன் அரஞ்சு சேர்க்கப்படுகிறது. பப்பாளியுடன் ஆரஞ்சு பழம் உட்கொள்வது மிகவும் தீங்கு விளைவிக்கும்.

(மறுப்பு: கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனை பொதுவான தகவல்கள் மட்டுமே. இது ஒரு நிபுணர் கருத்து அல்ல.)

மேலும் படிக்க

Papaya : பப்பாளியில் இருக்கும் நன்மைகள் !

பப்பாளியின் மருத்துவ குணங்கள்: உடலுக்கு நன்மை அளிக்கும் பப்பாளி பழம்

பாசன நீர் குறைந்த பகுதிகளுக்கு ஏற்ற மாற்றுப் பயிர் பப்பாளி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)