Health & Lifestyle

Thursday, 06 June 2019 04:13 PM

இன்றைக்கு மக்கள் பெரும்பாலும் சந்தித்து வரும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று "சர்க்கரை நோய்".

காரணங்கள்

 பரம்பரையாக ஏற்படுவது,  அதிக ஹார்மோன் சுரப்பு, அதிகமாக மருந்துகள் எடுத்துக்கொள்வது, போன்ற காரணங்களால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. மேலும் சிலருக்கு இரத்த அழுத்தம் (high blood pressure) அதிகமாக இருப்பதன் காரணமாகவும் இரத்தத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு நீரிழிவு நோய் உண்டாகிறது.

அறிகுறிகள்

அதிக சிறுநீர் போக்கு, அடிக்கடி பசியெடுத்தல், மயக்கம், சோர்வு, உடல் பருமன், கண் பார்வை குறைபாடு, சிறுநீரகத்தில் கோளாறு, போன்ற பிரச்சனைகள் வாழ்க்கையை போராட்டமாக ஆக்கிவிடும்.

பெரும்பாலும் மக்களுக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டால் எவ்வகை உணவுகளை உண்ண வேண்டும் என்று தெரிந்திருக்கும், ஆனால் அதை போல் சாப்பிட கூடாத உணவுகளை  பற்றி பலரும் அறிந்திருக்க இயலாது.

காய் வகைகள்

வாழைக்காய், சர்க்கரைப் பூசணி, பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு , காரட், பீட்ரூட், கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, போன்ற பூமிக்கு கீழே விளைவதை  தவிர்க்க வேண்டும்.

பழ  வகைகள்

பேரீச்சம் பழம், பலாப்பழம், உலர்ந்த பழ வகைகள், பெரிய வாழைப்பழம், டின்னில் அடைக்கப்பட்ட பழ வகைகள், பெரிய ஆப்பிள், பெரிய மாம்பழம், பெரிய கொய்யாப் பழம், சப்போட்டா பழம், சீத்தா பழம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

பானங்கள்

சர்பத் வகைகள், சர்க்கரை வகைகள் இளநீர், தேன், மதுவகைகள், ஆப்பிள் ஜூஸ், ஐஸ்கிரீம், பாதாம், கற்கண்டு, வெல்லம், பாயாசம், முந்திரி, கடலை,கேக் முதலியவை தவிர்க்க வேண்டும் .

மாமிச உணவுகள்

ஆடு, மாடு, பன்றி,  இறைச்சிகள் மற்றும் மஞ்சள் கரு இவை இவற்றை முக்கியமாக தவிர்க்க வேண்டும்.

எண்ணெய் பொருட்கள்

இனிப்பு பலகாரங்கள், சிப்ஸ், வடை, முறுக்கு, பூரி, சமோசா போன்ற உணவு பொருட்களால் உடல் எடை விரைவாக அதிகரிக்கும்.

குறிப்பிட்டு தவிர்க்க வேண்டியது

பாஸ்ட் புட் (fast food) உணவுகளில் சேர்க்கப்படும் எண்ணெய், நெய், வெண்ணை, மசாலாக்கள், அனைத்தும் சேர்வதால் அதிக கொழுப்பு, அதிக காரம், அதிக சோடியம் மற்றும் அதிக கலோரி இருப்பதால், சர்க்கரை பாதிப்புள்ளவர்களுக்கு இவை அதிக ஆபத்தை விளைவிக்கும்.

 

k.sakthipriya

krishi jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)