பார்ப்பதற்கு சிறு கற்கள் போல கரடு முரடாக இருக்கும் வெந்தயம், ஆனால் உண்மையில் இதில் அடங்கியுள்ள நன்மைகள் நம் உடலுக்கு எத்தகைய பயன்களை தரவல்லது என்பது நம்மில் குறைந்த அளவு மக்களே அறிந்திருப்போம். வீட்டின் அஞ்சறை பெட்டியில் இடம் பெரும் உணவுப் பொருட்களில் ஒன்று.
ஜீரணம் (Digestion)
வெந்தயம் என்றாலே ஜீரணத்திற்கும், உடல் உஷ்னத்திற்கும் தான் ஞாபகம் வரும். இந்த வெந்தயத்தை நாம் தினமும் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் எண்ணற்ற பலன்கள் நம் உடலில் உண்டாகும்.
சத்துக்கள் (Nutrients)
வெந்தயத்தில் புரதம், கொழுப்பு, நீர், மாவு, ஆகிய சத்துக்குள் அடங்கியுள்ளன. மினெரல், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளன.
மருத்துவப் பயன்கள் (Medial Benefits)
-
வெந்தயத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி வெப்பத்தை தணிக்கிறது.
-
மலச்சிக்கலை சீராக்கும்.
-
உடல் சூட்டினாலும் சிலருக்கு முடி கொட்டும் பிரச்சனை இருக்கும். எனவே வெந்தயத்தில் என்ன பசை இருப்பதால் முடி கொட்டுவது குறைந்து கருமையாகவும், நீளமாகவும் வளர உதவும்.
-
இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதயம் சார்ந்த பிரச்சனைகளை குறைக்கிறது.
-
வெந்தயத்தில் உள்ள கசப்பு தன்மை நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு நல்ல மருந்தாக உள்ளது.
-
வெந்தயத்தை ஊற வைத்த நீரை தினமும் காலையில் குடித்து வந்தால், அல்சர் பிரச்சனைக்கு தீர்வு உண்டாகும்.
-
மேலும் சர்க்கரை நோயானது நாள்பட குணமாகத் துவங்கும்.
-
வெந்தயத்தில் நார்சத்து இருப்பதால் அதிக பசி ஏற்படாமல் வயிற்றுக்கு தேவையானதை மட்டும் உட்கொள்ள உதவும். அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தையும் குறைக்கும்.
-
வெந்தயம் சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்தி சீரான இரத்த ஓட்டத்தை உண்டாக்குகிறது.
-
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலிகளுக்கு ஊற வைத்த வெந்தய நீரானது மிக சிறந்தது. மேலும் சாதாரண வயிற்று வலிகளுக்கும் இது சிறந்தது.
வெந்தயத்தின் தீமைகள் (Disadvantages)
-
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு, என்பதைப்போல எந்த ஒரு உணவையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் பாதிப்பை விலை விப்பதாகவே அமையும்.
-
அதிக அளவில் வெந்தயத்தை எடுத்துக்கொள்வதால் வாந்தி,குமட்டல் ஏற்படும்.
-
உணவுக்கோளாறு இருப்பவர்கள் வெந்தயத்தை உட்கொள்ளவே கூடாது.
-
மேலும் நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் மாத்திரை சாப்பிடுகிறீர்கள் என்றால், மருத்துவரை ஆலோசித்த பின்னரே வெந்தயத்தை உட்கொள்ள வேண்டும்.
-
இரண்டையும் எடுத்துக்கொண்டாள் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து விளைவுகள் விபரீதமாகிடும்.
K.Sakthipriya
Krishi Jagran