தங்கத்திற்கு அடுத்தபடியாக மக்களால் அதிகம் விரும்பிப் பயன்படுத்தப்படும் உலோகமான வெள்ளி, ஆயுர்வேதத்தில் நீண்ட காலமாக மிகக் சிறந்த மருந்தாகப் பயன்பட்டு வருகிறது. பொதுவாக மென்மையான உலோகம் என்று அழைக்கப்படும் வெள்ளி, நகைகள், சிலைகள், பாத்திரங்கள் உள்ளிட்ட பலவற்றை வடிவமைக்கப் பயன்படுத்தப்படுகிறது.
வெள்ளி
இது பெரும்பாலும் தங்கத்துடனோ அல்லது வேறு சில உலோகங்களுடனோ அவற்றைக் கடினமானதாக மாற்ற, வெள்ளி சேர்க்கப்படுகிறது.
மிகவும் பளபளப்பு வாய்ந்த நீலம் கலந்த வெள்ளை நிறம் கொண்ட வெள்ளியைச் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
வெள்ளி பஸ்பம் (Silver Paspham)
வெள்ளியைப் பஸ்மமாகச் சாப்பிடுவது உடலுக்கு ஏற்றது. இது வெள்ளிப் பற்பம், ரஜத் பஸ்மம் என்றும் அழைக்கப்படுவது உண்டு. ஆயுர்வேதத்தின் படி, ரஜத் பஸ்மம் ஒரு இயற்கையான ஆரோக்கிய அம்சமாகும். இது பல நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இதனை மாத்திரையாகவும் விற்பனை செய்கின்றனர்.
பொதுவாக வெள்ளி முதலியவற்றை அப்படியே உட்கொள்ள முடியாது. பல நிலைகள் மற்றும் செயல்முறைகளை கடந்து, இயற்கையான வெள்ளி ஒரு உண்ணக்கூடிய சாம்பல் வடிவத்திற்குக் கொண்டு வரப்படுகிறது.
நன்மைகள் (Benefits)
-
உடல் வலி மற்றும் வீக்கத்தைப் போக்குவதில் வெள்ளி பஸ்மம் இயற்கையான வலி நிவாரணியாகச் செயல்படுகிறது.
-
வாதம் மற்றும் பித்த தோஷங்களை இயற்கையாக சமன் செய்கிறது.
ஒருவரது மனநலம் குன்றியிருந்தால், அவருக்கு ரஜத் பஸ்மம், அதாவது வெள்ளி பஸ்மம் மிகவும் நன்மை பயக்கும்.
-
இரத்த சோகை (Anemia), வறட்டு இருமல், காய்ச்சல் ஆகிய பிரச்சனைகளுக்கு வெள்ளி பஸ்மம் பயனுள்ளதாக இருக்கும்.
-
சிறு வயதிலேயே சருமம் முதுமை அடைவதால் உங்களுக்கு பிரச்சனை இருந்தால், சருமத்தை இளமையாக மாற்ற வெள்ளிப் பஸ்மத்தை உட்கொள்ளலாம்.
-
இதய நோய்கள், பலவீனமான செரிமான சக்தி, உடல் பலவீனம், நீரிழிவு (Diabetes) போன்ற பிரச்சனைகளை வெள்ளி பஸ்மம் குணப்படுத்தும்.
சாப்பிடுவது எப்படி ?
-
வெள்ளி பஸ்மம் அதாவது ரஜத் பஸ்மத்தைக் காலையிலும் மாலையிலும் உணவு உண்ட பிறகு உட்கொள்ளலாம் என்றார்.
-
100-125 கிராம் வெள்ளி பஸ்மத்தை (ஒரு நாள் முழுவதும்) தேனுடன் உட்கொள்ளலாம்.
-
பொதுவாக ரஜத் பஸ்மத்தை உட்கொள்வது பாதுகாப்பானது என்கின்றனர் நிபுணர்கள்.
-
இருப்பினும், வெள்ளி பஸ்மத்தை உட்கொள்ளும் முன், ஆயுர்வேத நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது முக்கியமாகும்.
தகவல்
டாக்டர் அப்ரார் முல்தானி
ஆயுர்வேத நிபுணர்
மேலும் படிக்க...
தினமும் கீரை சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் - மக்களே உஷார்!