ஓடி ஓடி உழைத்துவிட்டு வரும்போது, உடல் அடையும் சோர்வுக்கு அளவே இல்லை. அவ்வாறு அடையும் சோர்வைப் போக்கி புத்துணர்ச்சிபெற, நிச்சயம் மசாஜ் கைகொடுக்கும்.
கிலுகிலுப்பான அனுபவம் (A thrilling experience)
மனிதர்களுக்கு மனிதர்கள் இதமாக மசாஜ் செய்வதற்காக மசாஜ் மையங்கள் இயங்கி வருகின்றன. சில மையங்களை பெண்களைக் கொண்டு கிலுகிலுப்பாக மசாஜ் செய்யப்படுவதும் உண்டு. ஆனால் இதைவிடக் கூடுதல் கிலுகிலுப்பைக் கொடுப்பதற்காக மனிதர்களுக்குப் பதிலாகப் பாம்புகளைக் கொண்டு திகில் மசாஜ் கொடுக்கிறார்கள். இந்த மசாஜிற்கு அலைமோதுகிறது மக்கள் கூட்டம். எங்கு தெரியுமா?
டஜன் பாம்புகள் (Dozens of snakes)
எகிப்து (Egypt) தலைநகர் கெய்ரோவில் உள்ள ஸ்பாவில் இப்படித்தான் நடக்கிறது. இங்கு மசாஜ் கைகளால் அல்ல, பாம்புகளால் செய்யப்படுகிறது. இது பாம்பு மசாஜ் (Snake Massage) என்று அழைக்கப்படுகிறது.
பாம்பு மசாஜ் செய்யப்படும்போது, ஒரு நபரின் உடலில் டஜன் கணக்கான பாம்புகள் விடப்படுகின்றன. பின்னர் அந்த நபரின் உடலில் பாம்புகள் ஊர்ந்து மசாஜ் செய்கின்றன. எனினும், இந்த பாம்பு மசாஜ் செய்யப்படும்போது பலர் மிகவும் பயந்துவிடுகிறார்கள்.
விஷப்பாம்புகள் (Poisonous snakes)
பாம்பு மசாஜில் விஷ பாம்புகள் பயன்படுத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஷம் இல்லாத பாம்புகள் மட்டுமே மசாஜ் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. ஆகையால் இந்த பாம்புகளால் எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை. இருப்பினும் முதன்முறையாக வருபவர்களுக்கு சற்று அச்சம் இருக்கிறது. பின்னர் அவர்களுக்குப் பழகிவிடுகிறது.இந்த பாம்புகள் உடம்பில் ஊர்ந்து செல்லும்போது உடலுக்கு ஓய்வு கிடைக்கும்.
நன்மைகள் (Benefits)
மூட்டு வலியிலிருந்து பாம்பு மசாஜ் நிவாரணம் அளிப்பதாக கெய்ரோவில் உள்ள ஸ்பா கூறுகிறது. அதுமட்டுமின்றி இதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
பாம்புகளுக்குப் பயிற்சி (Training for snakes)
பாம்பு (Snake) மசாஜ் சுமார் அரை மணி நேரம் செய்யப்படுகிறது. முதலில் மசாஜ் செய்யப்படும் நபரின் முதுகில் எண்ணெய் ஊற்றி மசாஜ் செய்யப்படுகிறது. இதற்குப் பிறகு, அந்த நபரின் முதுகில் பாம்புகள் விடப்படுகின்றன. அவை ஊர்ந்து மசாஜ் செய்யத் தொடங்குகின்றன. இந்த பாம்புகளுக்கு வாடிக்கையாளரைக் கடிக்காத வகையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பாம்பு மசாஜ் செய்துகொண்ட நபர்கள் இந்த மசாஜ் மூலம் தங்களுக்கு அதிக அளவில் நிவாரணம் கிடைத்ததாக கூறினர்.
நிபந்தனை (Condition)
இதயம் பலவீனமானவர்கள் பாம்பு மசாஜ் செய்யக் கூடாது என்று பாம்பு மசாஜ் செய்வதற்கு முன் அறிவுறுத்தப்படுகிறது. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்ற வரிகள் இந்த மசாஜிற்கு வருபவர்களுக்குப் பொருந்தாது.
மேலும் படிக்க...