Health & Lifestyle

Wednesday, 19 October 2022 08:37 AM , by: Elavarse Sivakumar

தீபாவளிப் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாட ஏதுவாக மாநில அரசுகள் போனஸ் உள்ளிட்ட அறிவிப்புகளை அறிவித்து வருகின்றன.
அந்த வரிசையில், பே மேட்ரிக்ஸ் லெவல் - 12 மற்றும் அதற்கும் குறைவான சம்பளம் பெறும் மாநில ஊழியர்களுக்கு போனஸ் பணம் வழங்கப்படும் என ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது.

6 லட்சம் பேர்

மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை ராஜஸ்தான் அரசுஅறிவித்துள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் இந்த முடிவால் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 6 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள்.

யாருக்கு கிடைக்கும்?

ராஜஸ்தான் சிவில் சர்வீசஸ் விதிகள், 2017ன் படி, பே மேட்ரிக்ஸ் லெவல் - 12 மற்றும் அதற்கும் குறைவான சம்பளம் பெறும் மாநில ஊழியர்களுக்கு இந்த போனஸ் பணம் வழங்கப்படும்.பஞ்சாயத்து சமிதி, ஜில்லா பரிஷத் ஊழியர்கள் மற்றும் பணிப் பொறுப்பு ஊழியர்களுக்கு இந்த போனஸ் தொகை வழங்கப்படும்.

அதிகபட்சம்

2021-22 ஆம் ஆண்டிற்கான அதிகபட்ச சலுகைகள் ரூ.7000 மற்றும் 31 நாட்கள் மாதத்தின் அடிப்படையில் தீபாவளி போனஸ் கணக்கிடப்படும் என்பதை அரசு ஊழியர்கள் கவனிக்க வேண்டும்.அரசின் அறிவிப்பின்படி, ஒவ்வொரு பணியாளருக்கும் அதிகபட்ச போனஸ் பணமாக ரூ.6774 கிடைக்கும். மேலும், 75% பணம் ரொக்கமாகவும், 25% ஜிபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு தீபாவளி போனஸில் போனஸ் பணத்தில் 50 சதவீதம் ரொக்கமாகவும், 50 சதவீதம் பணம் ஊழியர்களின் ஜிபிஎப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

அரசு ஊழியர்களுக்கு 10% போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு!

வட்டியை உயர்த்திய வங்கி- வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)