Pickel Benefit In Tamil: வீக்கம், இரத்த சோகை, வைட்டமின் டி(Vitamin D) மற்றும் பி 12(B12) குறைபாடுகளைக் குறைக்க தினமும் ஊறுகாய் சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் கூறியுள்ளார்.
Tamil Health Tips: நாம் நம்முடைய வீட்டில் தயாரிக்கும் ஊறுகாயில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இயற்கை பொருட்களால் ஆன ஊறுகாயில் வைட்டமின் கே(Vitamin K), ஏ(A) மற்றும் புரோபயாடிக் பாக்டீரியாவின் சிறந்த ஆதாரம் உள்ளது என்று பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் தெரிவித்துள்ளார்.
ஊறுகாயில் உப்பு மற்றும் எண்ணெய் அதிகம்?Pickles are high in salt and oil?
தன்னுடைய சமீபத்திய இன்ஸ்டா வலைதள பதிவில் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஊறுகாய் ஆரோக்கியமற்றது என்ற கட்டுக்கதைகள் மற்றும் பயங்களை உடைத்துள்ள ருஜுதா திவேகர் “எண்ணெய் மற்றும் உப்பு இல்லாமல், நட்பு பாக்டீரியா வளராது மற்றும் இவை சேர்க்காவிட்டால் ஒரு ஊறுகாயின் அனைத்து நன்மைகளும் உங்களுக்கு கிடைக்காது” என்று எழுதியுள்ளார்.
ஊறுகாயில் உப்பு இரத்த அழுத்த பிரச்சினைகளை ஏற்படுத்தும்?Salt in pickles can cause blood pressure problems
உப்பை விட, வெறுமனே உட்கார்ந்த வாழ்க்கை முறைதான் ஆரோக்கியமற்ற மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை வழிவகுக்க கூடும் என்று குறிப்பிடுள்ள ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் “உடற்பயிற்சி இல்லாமை, மோசமான தூக்கம் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவு போன்ற பழக்கங்களே இதற்கு முக்கிய கரணம் என்று கூறியுளளார். ஒருவரின் உணவு பாரம்பரியத்தின்படி, பதப்படுத்தப்படாத அல்லது காலா நாமக் (கருப்பு உப்பு) அல்லது செந்தா நாமக் (இமாலய உப்பு) ஆகியவற்றைப் பயன்படுத்வது நல்லது” என்று பரிந்துரைத்துள்ளார்.
ஊறுகாயில் உள்ள எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு?Is pickle oil harmful to heart health?
“கொழுப்பு அல்லது எண்ணெயை உட்கொள்வது இதயப் பிரச்சினைகளை உருவாக்காது, நிலக்கடலை அல்லது கடுகு அல்லது நல்லெண்ணெயைப் பயன்படுத்தலாம்” என்று ஊட்டச்சத்து நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
ஊறுகாய் ஆரோக்கியமற்றது?Is pickle unhealthy?
“ஊறுகாயில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நட்பு பாக்டீரியாக்கள் அதிகம். வீக்கம், இரத்த சோகை, வைட்டமின் டி மற்றும் பி 12 குறைபாடுகளைக் குறைக்க தினமும் ஊறுகாய் சாப்பிட வேண்டும். இது எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (IBS) க்கு பயனளிக்கும், அதன் அறிகுறிகளில் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் ஆகியவை அடங்கும் நிபுணர் ருஜுதா திவேகர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க:
மினி பட்ஜெட்டில், மெகா வருமானம் தரும் பெண்களுக்கான தொழில்கள்- முழுவிபரம் உள்ளே!
காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி- TNAUவில் ஏற்பாடு !