அரசின் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கும் வகையில், பல்வேறு உணவகங்கள், கொரோனா தடுப்பூசிச் செலுத்திக்கொண்டு, அதற்கான சான்றிதழ் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்படும் என அறிவித்துள்ளன. இதனால், ஹோட்டல்களில் சென்று விதவிதமான உணவுகளை ஆசையோடு சாப்பிடும் உணவுப் ப்ரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் வியாபித்து மக்களை அச்சத்தின் பிடியில் வைத்திருக்கிறது கொரோனா அரக்கன்.இதையடுத்து நடைபெற்ற ஆராய்ச்சியில் கொரோனாத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சில வதந்திகள் காரணமாக, தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் மட்டுமல்ல,
போலந்திலும் இதுதான் நிலைதான்.
56% மக்கள் (56% of the population)
அந்த நாட்டு மக்களில் சுமார் 56% மக்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இது ஐரோப்பிய ஒன்றிய அளவில் சராசரியை விட மிகக் குறைவாக கருதப்படுகிறது.
மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானவர்கள் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி பெற்றுள்ளனர். இந்நிலையில், தடுப்பூசி போட்டுள்ள வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிப்பதன் மூலம் தனது ஊழியர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை வார்சா நகர ஹோட்டல்கள் மேற்கொண்டுள்ளன. இது மிகவும் முக்கிய முடிவு என்றும், எதிர்ப்புகள் எழுந்தாலும் வழக்கமான வாடிக்கையாளர்கள் அதை ஏற்றுக் கொண்டதாக உணவு உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
10% அதிகரிக்கும் (10% increase)
வாடிக்கையாளர்கள் தங்கள் தடுப்பூசிச் சான்றிதழ்களை உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் பிற இடங்களில் காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கை தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை 10 % அதிகரிக்கும் என்று மருத்துவக்குழு ஆலோசகரான பேராசிரியர் ராபர்ட் ஃபிளிசியாக் தெரிவித்துள்ளார்.
விமர்சனங்கள் (Reviews)
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30,000 ஐத் தாண்டியுள்ளது. தொற்றுநோய்கள் அதிகரித்து வரும் நிலையில் போலாந்து அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்காதது கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.
மேலும் படிக்க...
10 நாட்கள் தனிமைப்படுத்துதல் போதாது - புதிய ஆய்வில் தகவல்!
கொரோனா 3வது அலை எப்போது Endcard போடும்? நிபுணர்கள் விளக்கம்!