'நீரின்றி அமையாது உலகு' - இந்த வாக்கியம் அனைவருக்கும் பொருந்தும். உணவின்றி கூட நம்மால் உயிர் வாழ முடியும். ஆனால் நீரின்றி ஒரு நாள் கூட நம்மால் வாழ இயலாது. இவ்வுலகில் உள்ள அனைத்து பொருட்களிலும் கலப்படம் செய்ய முடியும், அல்லது மாற்று உண்டு ஆனால் மாற்று, கலப்படம் செய்ய இயலாத ஒரே பொருள் தண்ணீர் மட்டும் தான்.
இவ்வுலகம் நீரினால் சூழ்ந்துள்ளது. நம்ம உடலுக்கு தான். முறையாக, நிறைவாக தண்ணீர் பருகி வந்தால் எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்த முடியும் என்கிறது அறிவியல். நம்மில் பெரும்பாலானோர் இன்று ஒத்துக்கொண்ட விஷயம் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையே ஆரோக்கியமானது. இன்றைய சூழலில் அவசியமானதும் கூட.
பொதுவாக தண்ணீரை சுத்தப் படுத்திய பிறகு தான் குடிக்க வேண்டும். பண்டைய காலங்களில் நீரினை குளங்கள், ஏரிகளில் இருந்து எடுத்து வந்தனர். பின் வெள்ளை துணியில் வடிகட்டி செம்பு பாத்திரம், மண் பாத்திரங்களில் சேகரித்து வைத்து குடித்து வந்தனர். இன்றைய அறிவியலும் அதுவே தூய்மையான நீர் என்கிறது.
பெருகி வரும் மாசி பிரச்சனையினால் பல வகையான நோய்களும் உண்டாகுகிறது. தண்ணீரை விலைகொடுத்து வாங்கினால் கூட சுத்தமானதா என்ற ஐயப்பாடு இருந்து கொண்டே இருக்கிறது. சந்தையில் எத்தனையோ தண்ணீர் சுத்திகரிப்பு கிடைக்கிறது. அவை அனைத்தும் இயற்கை கனிமங்களை அழித்து நமக்கு பேராபத்தை தருகிறது என்ற அதிர்ச்சி தகவல் எத்தனை பேருக்கு தெரியும்.
இயற்கை சுத்திகரிப்பான்கள்
நம் முன்னோர்கள் உபயோகித்த மண்பாண்டம், செம்பு பத்திரங்கள் மிகச்சிறந்த நீர் சுத்திகரிப்பு ஆகும். இயற்கை அளித்த இந்த பியூரிபையர்கள் அத்தனையும் நமக்குக் கிடைத்த வரமே. ஆனால் நம்மில் எதனை பேர் உபயோகிக்கிறோம் என்பது கேள்விக்குறி?.. வெயில் காலங்களில் மண்பாண்டங்களையும், குளிர்காலங்களில் செம்பு பாத்திரங்களை பயன்படுத்தினர்.
நீங்களே உங்கள் விட்டு நீரை எளிய முறையில் சுத்திகரிக்கலாம்
தேத்தான் கொட்டை
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இது நீரை அதிகளவு சுத்திகரிக்கும் தன்மை வாய்ந்தது,எனவே தான் பழங்காலங்களில் தேத்தான் கொட்டையை நன்கு அரைத்து நீரில் கலந்து கிணற்றில் கொட்டி விடுவார்கள். இது தண்ணீரில் உள்ள கிருமிகள், அழுக்குகள் இவற்றை நிக்கி தூய்மையான தண்ணீரை தரும். அதோடு, உடல் இளைத்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற குடிநீர் இது.
முருங்கை விதை
முருங்கை விதைகளிலும், தேத்தான் கொட்டையைப் போலவே நீரில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது. இரவு படுக்கும் முன் நாம் குடிக்கும் நீரில் போட்டுவிட்டு, காலையில் நீரை வடிக்கட்டி குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது.
துளசி
துளசியில் இல்லாத சத்துகளே இல்லை எனலாம். இது மிகச் சிறந்த கிருமி நாசினி. குறிப்பாக செம்பு பாத்திரங்களில் துளசி இலைகளை போட்டு, பின்னர் பருகி வந்தால் எந்தவொரு நோயும் நம்மை நெருங்காது.
மூலிகை நீர்
குடிக்கும் நீரில் வெட்டிவேர், நன்னாரி வேர், கோரைக்கிழங்கு, ஏலம், அதிமதுரம் போன்றவற்றைத் தண்ணீரிலிட்டு நன்றாகக் கொதிக்கவைத்து, தினமும் இந்த மூலிகை நீரை பயன்படுத்தினால், தண்ணீரின் மருத்துவக் குணம் அதிகரிக்கும்; நீருக்குச் சுவையும் கூடும். உடல் ஆரோக்கியம் பெறும்.
மேலே சொன்ன முறைகளை முயற்சித்து ஆரோக்கியமான வாழ்வினை மேற்கொள்ளுங்கள்.
Anitha Jegadeesan
Krishi Jagran