பழங்கள் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. பழங்களை தினமும் சாப்பிட வேண்டும், அதில் நிறைய சத்துக்கள் உண்டு என்று வீட்டில் உள்ளவர்கள் கூறி இன்றும் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறோம். அதற்கான முடிவு வெறும் ஒரு நாள் கூத்தே.
இப்படி நன்மைகள் பல நிறைந்திருக்கும் பழங்களில் நாவல் பழமும் ஒன்றாகும். இவற்றின் பழம், இலை, விதை, பட்டை என அனைத்தும் சித்த மருத்துவத்தில் பயன் படுத்தப்படுகின்றன. இந்த நாவல் பழத்தை உண்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
சத்துக்கள்
ஆன்டி ஆக்ஸிடன்ட்
கால்சியம்
பொட்டாசியம்
பாஸ்பரஸ்
இரும்புச் சத்து
வைட்டமின் பி1, பி2, பி5,
நன்மைகள்
கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோயை தடுக்கும்
பசியை தூண்டும்
தோல் சுருக்கங்களை தடுக்கும்
எலும்புகளை பலமாக்கும்
உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்கும்
வாய் மற்றும் குடல் புண்களை குணமாக்கும்
ரத்தம் சுத்தமாகிறது
மலச்சிக்கல், வெண் புள்ளி, அரிப்பு பிரச்சனைகள் தீரும்
சர்க்கரை நோய் குணமாகும்
பித்தத்தை தணிக்கும்
இதயத்தை சீராக இயங்கச் செய்யும்
ரத்த சோகையை குணப்படுத்தும்
அதிக சிறுநீர் போக்கு குறியும்
வயிற்றுப் போக்கை நிறுத்தி வயிற்றில் தங்கியிருக்கும் நச்சுக்கள், கிருமிகளை வெளியேற்றும்
மலட்டுத் தன்மை குணமாகும்
ஆஸ்துமா நோய் சிறிது சிறிதாக குறையும்
வறட்டு இருமலை போக்கும்
செய்யக்கூடாதவை
நாவல் பழத்தை அதிகம் உண்ணக்கூடாது. இல்லாவிட்டால் உடல் வலி மற்றும் காய்ச்சலுக்கு வழிவகுக்கும்.
வெறும் வயிற்றில் நாவல் பழத்தை உண்ணக்கூடாது.
நாவல் பழம் சாப்பிட்ட பிறகு பால் அருந்த கூடாது.
அறுவை சிகிச்சைக்கு போகும் நோயாளிகள் நாவல் பழத்தை உண்ணக்கூடாது.
K.Sakthipriya
Krishi Jagran