கட்டுக்கோப்பான உடலமைப்பைப் பெற உடல்பயிற்சியுடன் சேர்த்து, ஊட்டச்சத்து நிறைந்த உணவை நாம் உட்கொள்ள வேண்டியதும் மிகமிக அவசியம். அவ்வாறு ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஊட்டசத்துமாதமாக என அழைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக மக்களிடம் வாழ்க்கை முறையில் நடைமுறை மாறி வருவதால் எல்ல வயதினருக்கும் ஆரோக்கியமான ஊட்டசத்துகளை கொண்டு செல்வது மிக மிக முக்கியமானதாகும். ஊட்டசத்து (NUTRITION) என்பது வாழ்க்கைக்கு ஆதாரமான அத்தியாவசிய மூலக்கூறுகளை உயிரணுக்களுக்கும்,அதன் மூலம் உயிரினங்களுக்குவழங்குகின்ற உணவாகும். இது மாவுச்சத்து,புரதம்,கொழுப்பு மற்றும் பல்வேறு உயிர்சத்துகள், தாது உப்புகள் கொண்டவை.
வாழ்க்கை முறை
ஊட்டசத்து மாதம் என்பது மக்களின் வாழ்க்கை முறைகளை தேர்வுகளை இடை நிறுத்தவும் மதிப்பிடவதை நினைவு படுத்த கிறது. அதே நேரத்தில் அவர்களின் ஆரோக்கித்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அவசியத்தை ஓப்பு கொள்ளுகிறது. தினமும் ஓரு கையளவு பாதமை உட்கொண்டாலே போதுமானது. குறிப்பாக அந்தந்தப் பகுதியில் கிடைக்கின்ற சிறுதானியங்கள்(வரகு,குதிரைவாலி, தினை, சாமை, காடை கன்னி கம்பு,கேழ்வரகு) பயறு வகைகள் அந்த அந்த மண்ணில் அந்த அந்த பருவத்தில் விளைகின்ற காய்கறி பழங்களை உணவாக எடுத்து கொண்டலே போதும்.
சாப்பாடு
சிறுதானியங்களில்15% புரதம்,அதிக அளவு நார்சத்துகளைக் கொண்டுள்ளன. அதேபோல், வைட்டமின்களும், தாதுஉப்புகளும் நிறைந்து காணப்படுகின்றன.
நாம் பெரும்பாலும் காலை உணவை புறக்கணிக்கிறோம். அது தவறு. காலை உணவை ஒரு மகாராஜா சாப்பிடுவது போல சாப்பிட வேண்டும். மதிய உணவை ஒரு இளவரசன் சாப்பிடுவது போல சாப்பிட வேண்டும் இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் சாப்பிடுவது போல கொஞ்சமாக சாப்பிட வேண்டும்.
சிறு தானிய ஆண்டு
நாம் அதன்படி செய்கிறோமோ என்றால் இல்லை. அதிக அளவாக மைதா உணவு வகைகளை சாப்பிடு கிறோம் இது தவறான செயல்பாடு.
2023ஆம் ஆண்டு சர்வதேச சிறு தானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசும் மத்திய அரசும் உணவு மற்றும் ஊட்டசத்துபாதுகாப்பு இயக்கத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட மானிய உதவிகளை வழங்கி ஊட்டச்சத்துள்ள தானியங்களை உற்பத்தி செய்ய வழிவகுக்கிறது.
பள்ளிக்கூட மாணவர்களுக்கு முறையான ஊட்டச்சத்துள்ள உணவு கிடைத்திட ஏதுவாக தமிழகத்தில் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே, ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொண்டு ஆரோக்கியமாக நமது முன்னோர்கள் வாழ்ந்து போல வாழுவோம் என இந்த செப்டம்பர் மாதத்தில் உறுதி எடுப்போம்.
தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் தொழில்நுட்ப ஆலோசகர்
அருப்புக்கோட்டை
மேலும் படிக்க...
செரிமானத்தை மேம்படுத்த இந்த உணவுகள் போதும்!
ஹோட்டல் நிகழ்ச்சியில் இளம் பெண்களுக்கு பானம் இலவசம் - வித்தியாசமான விளம்பரம்!