மனித வாழ்வின் ஆதாரமே மரங்கள் தான். ஏனெனில் மரங்கள் பிராண வாயுவை மட்டுமல்லாமல், மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கின்றன.
அந்த வகையில் பூவுக்கெல்லாம் அரசன் போல், நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். பூவரசம் மரத்தின் தாவரவியல் பெயர் தெஸ்பீசியா பாபுல்னியா (Thespesia poulnea (L) என்பதாகும்.
இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை. அனைத்து வகை தோல் நோய்களுக்கும் அருமருந்தாகும்.
பூவரசு இலையில் சிறுவர்கள் `பீப்பீ' செய்து ஊதி விளையாடுவது வாடிக்கை. ஆக்சிஜனை அதிகளவு உற்பத்தி செய்பவை என்பதால், இந்த பூவரசு மரங்கள் என்பதால் கிராமம்தோறும் காணப்பட்டன. புயலைத் தாங்கி நிற்கும் சக்திகொண்ட இந்த பூவசரசு, ஒருவேலை சாய்ந்தால், சாய்ந்தபடியே வளரும் தன்மை படைத்தது.
மருத்துவப் பயன்கள் (Medical benefits)
-
பூவரசு இலையை அரைத்து சொறி, சிரங்கு, தேமல் போன்றவற்றுக்குப் பற்று போட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
-
பூவரசு மரத்தின் காய்களை அம்மி அல்லது கருங்கல்லில் உரசினால் வரக்கூடிய மஞ்சள் நிறப்பாலை தேமல் உள்ள இடங்களில் தடவி வந்தால் நாளடைவில் தேமல் அகலும். படர்தாமரை என்று சொல்லக்கூடிய தோல் நோயும் குணமாகும்.
-
கை-கால் மூட்டு வீங்கியிருந்தாலும் இதே மஞ்சள் நிறப்பாலை பூசினால் குணம் கிடைக்கும்.
-
பூவரசு மரத்தின் வேர்ப்பட்டையை நீர் விட்டு கொதிக்க வைத்து அதில் 50 மில்லி அளவு எடுத்து 10 மில்லி விளக்கெண்ணெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பேதியாகும். இதன் மூலம் தோல் நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும்.
-
செதில் செதிலாக உதிரக்கூடிய சொரியாசிஸ் நோய்க்கு பூவரசம்பட்டை நல்ல மருந்தாகும். அதாவது, 100 ஆண்டுகள் ஆன பூவரசு மரத்தின் பட்டையுடன் காய், பூ சேர்த்துப் பொடியாக்கி காலை, மாலை ஒரு டேபிள்ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
-
முற்றிய மரத்தின் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதை வாயில் வைத்துக் கொப்புளிப்பதோடு உள்ளுக்குள் விழுங்கி வந்தால் உதட்டில் வரக்கூடிய வெண்தேமல் சரியாகும்.
-
சர்க்கரை நோயாளிகளின் ஆறாத புண்களுக்கு, பூவரசம்பட்டையை நீர் விட்டுக் கொதிக்க வைத்து சூடு ஆறியதும் கழுவி வந்தால் பலன் கிடைக்கும்.
-
கல்லீரலின் பலவீனம்தான் மஞ்சள் காமாலை நோயின் தாக்கம். பூவரச மரத்தின் பழுத்த இலை இரும்புச் சத்து நிறைந்தது. பழுத்த இலைகளுடன் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்துக் குடித்தால் மஞ்சள் காமாலை நோய் குறையும்.
-
இதன் காயை இடித்து சாறு எடுத்தால் பசபசப்புடன் பால் இருக்கும். இது மேக நோய்களை போக்க சிறந்த மருந்தாகும்.
-
நூறு வருடமான பூவரச மரத்தின் வேரை நன்கு உலர்த்திப் பொடி செய்து முறைப்படி உண்டு வந்தால் தொழுநோய் குணமாகும்.
-
பூவரசம் வேர்ப்பட்டையை நீர் விட்டுக் காய்ச்சி 50 மி.லி.யுடன் 10 மி.லி. ஆமணக்கு எண்ணெய் சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிக்க பேதியாகும். பேதி நிற்க மோர் குடிக்கவும். இதனால் சொறி, சிறங்கு, படை நோய்கள் குணமாகும்.
-
மருத்துவக்குணம் நிறைந்த பூவரசு மரம் மிக எளிதாக வளரக்கூடியது. அதன் கிளைகளை வெட்டி நட்டாலே தளிர் விட்டு வளரும். எனவே இதனை அனைத்து இடங்களிலும் வளர்த்து அதிக பிராணவாயுவைப் பெறுவதோடு நோய்களையும் வெல்வோம்.
தகவல்
அக்ரி சு சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289 -
மேலும் படிக்க...
யாரும் அறிந்திராத வேம்பின் பயன்கள் என்னவென்று தெரியுமா?
பாக்கெட் சானிடைசர் கம் பேஸ்மாஸ்க் ஸ்ப்ரே- நாட்டிலேயே முதன்முறையாக உதகையில் தயாரிப்பு!