மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 February, 2020 5:21 PM IST

வணிக ரீதியாக தற்போது அதிகம் பயிர் செய்யப்படும் வெண்ணெய் பழ மரம் பொதுவாக வெப்ப மண்டலம் மற்றும் துணை வெப்ப மண்டலங்களில் காணப்படுகிறது. இம்மரம் செழித்து வளர காற்றோட்டமான வளமான மண்ணும், நீர்பாசனமும் தேவைப்படுகிறது. இப்பழமானது பூக்கும் மரவகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. 20 முதல் 30 அடி உயரம் வரை வளரும் இம்மரத்தில், பச்சை நிறப் பூக்கள் குளிர் காலத்தில் தோன்றி, 8ல் இருந்து 10 மாத கால அவகாசத்தில் பச்சை நிற காயாக உருவெடுக்கிறது.

அவகோடா பழம் விளையும் நாடுகள்

உருண்டையாகவோ அல்லது பேரிக்காய் வடிவிலோ காணப்படும் இந்த அவகோடா பழத்தின் வெளிப்புறம் அடர் பச்சை வண்ணத்தில் தடிமனாக, முதலையின் தோலினை ஒத்து இருப்பதால் இப்பழம் ‘முதலைபெரி’ என்றும் அழைக்கப்படுகிறது. பழுக்கும்போது பழுப்பு அல்லது அடர்ஊதா நிறத்திற்கு மாறுகிறது. இப்பழமரங்கள் தென்னாப்பிரிக்கா, பெரு, சிலியின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகள், வியட்நாம், இந்தோனேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா, தென்இந்தியா, மலேசியா, பிலிபைன்ஸ், மத்திய அமெரிக்கா, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் காணப்படுகிறது. அவகோடா நன்கு விளைந்தவுடன் காயாகவே மரத்திலிருந்து பறிக்கப்பட்டு பழுக்க வைக்கப்படுகிறது.

மருத்துவ மகிமைகள் நிறைந்த வெண்ணெய் பழம்

  • இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் கொழுப்பு அடைக்காமல், மாரடைப்பு, இதய நோய்கள் இன்றி நீண்ட நாட்கள் வாழ இப்பழமும், பழத்தின் எண்ணையும் பயன்படுகிறது.
  • இயற்கையாகவே இப்பழத்தில் அதிக கலோரிகள் நிரம்பியுள்ள நிலையில், இதில் உள்ள 'வைட்டமின் ஏ' கண்களின் பார்வை திறனை பாதுகாக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது.
  • விந்து உற்பத்தி தடை இல்லாமல் உருவாக உதவும் இப்பழத்தினை சாப்பிட்டு வந்தால் மலட்டு தன்மை குறைவதோடு, தாம்பத்திய உறவும் சிறப்பாக இருக்கும்.
  • சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த இப்பழம் 30 வகையான புற்றுநோய் காரணிகளையும், எய்ட்ஸ் வைரஸ்களையும் வேருடன் அழிக்கிறது.
  • சிறுநீரகத்தில் ஏற்படும் புண், வீக்கம் போன்றவற்றை குணமாக்க பழுத்த பப்பாளி பழத்துடன் அவகோடா பழங்களை சேர்த்து சாப்பிடலாம்.
  • சொறி சிரங்கு உள்ளவர்கள் அவகோடா பழத்தின் எண்ணெயை உடம்பில் தேய்த்து வருவதோடு, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • இந்த பழம் குடல்களை சுத்தப்படுத்தி, கழிவுகளை வெளியேற்றிவிடுவதால் வாய் துர்நாற்றம் அகன்று விடும்.

விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்காத பட்டர் ப்ரூட்

அவகோடா மரங்களை விவசாயிகள் நம்பிக்கையுடன் நடவு செய்யலாம். ஒரு பழம் 500 கிராம் முதல் 1.250 கிலோ வரை இருக்கும். ஒரு மரம் 200 முதல் 300 காய்கள் காய்க்கும். ஒரு மரத்திற்கு 60 கிலோ தொழு உரம் மட்டும் போதுமானது. வேலையாட்கள் உதவி அதிகம் தேவைப்படாத இவ்வகை மரம், அதிக லாபமும், நல்ல எதிர்காலமும் கொண்ட வறட்சியை தாங்கி மானாவரி சாகுபடியில் லாபம் தரும். வன விலங்குகள் இந்த வகை மரங்களை சேதப்படுத்தாது. ஒருபோதும் இவ்வகை மரம் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாது. இப்பழமானது தனிப்பட்ட மணம் மற்றும் சுவையினை உடையது. தமிழகத்தில், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அதிக அளவில் அவகோடா மரங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெண்ணெய் பழத்தின் தன்மை

அவகோடா, ஆனைக்கொய்யா, முதலைபேரி, பால்டா, பட்டர் ப்ரூட் என்று பல வகை பெயர்களை கொண்ட இப்பழத்தின் சதைப்பகுதியானது காயாக இருக்கும்போது வெளிர் மஞ்சள் நிறத்திலும், பழுக்கும் போது அடர் நிறத்தில் வெண்ணை போன்று வழுவழுப்பாக இருக்கும். இந்நிலையில், தற்போது இந்த பழங்கள் உணவுப் பொருளாக மட்டும் அல்லாது பேஷியலுக்காக அழகு நிலையங்களிலும் பயன்படுத்தப்படுவதால், இதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. வெளிநாட்டில் சத்து பானமாகவும், நட்சத்திர ஓட்டல்களில் சப்பாத்தி மென்மையாக தயாரிக்க வெண்ணைக்கு பதிலாக இப்பழம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கர்ப்பிணிகளின் நலனை பேணும் பட்டர் ப்ரூட்

கர்ப்பிணி பெண்களுக்குத் தேவையான, குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடுகளை சரிசெய்யும் ஃபோலிக் அமிலம் இப்பழத்தில் ஏனைய பழங்களைவிட அதிகமாகவே கிடைக்கிறதாம். மேலும் இப்பழத்தில் காணப்படும் ‘விட்டமின் கே இரத்தம் உறைதலுக்கு துணை புரிந்து தாய் மற்றும் சேய்க்கு பாதுகாப்பினை அளிக்கிறது.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் வாந்தியை இப்பழத்தில் காணப்படும் விட்டமின் பி6 கட்டுப்படுத்துகிறது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்களுக்கு மிகவும் உதவியாகவும், புது தகவல்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். சமீப காலமாக பலரும் பழச்சாறு கடைகளில் பட்டர் ப்ரூட் சாறினை பற்றி அறியாமலே குடித்து வந்தோம். தற்போது அதன் விவரங்களை அறிந்து அவகோடா பழங்களை உண்டு தக்க பலன்களை அடையுங்கள்.

M.Nivetha
nnivi316@gmail.com

English Summary: Do you know the Health Benefits of Avocado? May Cure Many Health Problem
Published on: 05 February 2020, 05:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now