Health & Lifestyle

Friday, 04 October 2019 06:33 PM

லெமன் க்ராஸ்” என்னும் எலும்பிச்சை புல்  இன்று அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. இந்த லெமன் க்ராஸ் தமிழில் வாசனைப் புல்” என்றும் அழைக்கப் படுகிறது. இதில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் ஒளிந்துள்ளன. இந்தியாவை பொறுத்தவரை வெகு சிலருக்கே இது பரிட்சியமான மற்றும் பயன்படுத்தப்பட்டு வரும் அரிய வகை மூலிகை ஆகும்.

தாய்லாந்தைத் தாயகமாகக் கொண்ட இந்த லெமன் க்ராஸானது பர்மா, இலங்கை, சீனா, இந்தோனேஷியா, இந்தியா போன்ற நாடுகளில் கிடைக்கிறது. புத்துணர்ச்சியினை கொடுக்க கூடிய இந்த புல் இந்தியாவில்,  கேரளா மாநிலத்தில்  அதிக அளவில் பயிரிடப்படுகின்றன

எல்லா வகையான‌ மண் வகைகளிலும் நன்கு செழித்து வளர கூடியது, மேலும் இதனை வீட்டு  தொட்டிகளிலும் வைத்துக் கூட வளரச் செய்யலாம். இது கொஞ்சம் லெமனின் நறுமணமும், கொஞ்சம் இஞ்சியின் வாசனையும் கல‌ந்ததுபோல் இருப்பதால் இதனை “எலுமிச்சைப் புல்”, “இஞ்சிப் புல்” போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.  

இந்த லெமன் க்ராஸ் என்ற புல் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவை 

  • லெமன் க்ராஸ் டீ
  • லெமன் க்ராஸ் பவுடர்
  • லெமன் க்ராஸ் ஆயில்
  • லெமன் க்ராஸ் சோப்பு
  • லெமன் க்ராஸ் ரூம்  பிரெஸ்னர்

என எண்ணற்ற பொருட்கள் தயாரிக்க இது மூலப்பொருளாக பயன் படுகிறது.

லெமன் க்ராஸ் டீ

லெமன் க்ராஸ்  டீயை தயாரிக்க, அதன் இலைகளை சிறிதாக நறுக்கி  நீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.  10 நிமிடம் கொதிக்க விட்டால் போதுமானது, இத்துடன் சர்க்கரை எதுவும் சேர்க்காமல் பருகினால் பலன் முழுமையாக கிடைக்கும்.

ஆரோக்கிய பயன்பாடு

தாய்லாந்து மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் லெமன் க்ராஸ் மிக முக்கிய காரணமாகும்.  லெமன் க்ராஸ் டீ உடலில் தேங்கி உள்ள கழிவுகளை வெளியேற்று அக உறுப்புகளையும் தூய்மையாக வைத்துக்கொள்ளும். இதில் இருக்கும் வேதிப் பொருட்கள் செரிமான பிரச்னையை தீர்த்து உடல் சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

லெமன் க்ராஸ் அதிக மருத்துவ குணம் கொண்டது என்பது அறிந்ததே. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் அதிக அளவில் இருப்பதால் இந்த புல்லை டீ போன்று தயாரித்து குடித்தால் நோய்கள் நம் அருகில் வராது.

மெலிந்த தேகம் 

இன்று நம்மில் பலரும் சந்திக்கும் பிரச்சனை  உடல் பருமன். விரைவில்  எடையை குறைத்து ஒல்லியாக வேண்டும் என்கிற எண்ணம் அதிகமாகவே இருக்கும். உங்களின் ஆசையை எளிதாக நிறைவேற்ற மிக குறைந்த கலோரிகளை கொண்ட லெமன் கிராஸ் டீ தொடர்ந்து குடித்து வாருங்கள்.

சர்க்கரை நோயா

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீர் செய்து இன்சுலின் சுரப்பை சரி செய்கிறது. உடலுக்கு தேவையான ஆற்றலை அளிப்பதுடன் இந்த மாதவிடாய் வலியை குறைகிறது.

மலச்சிக்கல் சிக்கலா

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் சந்திக்கும் பிரச்சனை  இந்த மலச்சிக்கல். இயற்கை அளித்துள்ள வரப்பிரசாமான இந்த லெமன் க்ராஸ் செரிமானத்தை சீராக வைத்து மலச்சிக்கலை தடுக்கும். இதிலுள்ள சிட்ரஸ் அமிலம் உடலில் தேங்கி உள்ள கழிவுகளை வெளியேற்றி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

உயர் ரத்த அழுத்தத்தமா

ரத்தத்தில் உள்ள கெட்ட  கொலஸ்ட்ராலை முழுவதுமாக குறைக்க இந்த லெமன் க்ராஸ்  டீ பேருதவியாக இருக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் ரத்த ஓட்டத்தை சீர் செய்து,  இதய நோய்கள் வராமல் தடுத்து விடுகிறது.

முடி உதிர்வா

அட என்ன செய்தாலும் முடி உதிர்வு குறையவில்லையே என்கிறவர்களுக்கு ஒரு எளிய மருந்து லெமன் க்ராஸ் டீ குடித்து வந்தாலே போதும். இதிலுள்ள வைட்டமின் எ மற்றும் வைட்டமின் பி உங்களின் முடி உதிர்வுக்கு  முற்றுப்புள்ளி வைக்கும்.

லெமன் க்ராஸ் ஆயில்

இது வெளிப்புற பயன்பாட்டிற்கு மிகவும் உகந்தது. சரும பிரச்சனைகளையும், வலிகளையும் நீக்க உதவுகிறது. கிருமி நாசினியாகவும், மணமுட்டியாகவும்  பயன்படுகிறது. தீபங்களில் இந்த ஆயிலை பயன்படுத்தும் போது நறுமணமும், புத்துணர்வும் உண்டாகும்.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)