Benefits of pomegranate flower
மாதுளம் பழத்தைப் போன்றே மாதுளம் பூவிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. மாதுளையின் பழம், பூ, பட்டை, காய் ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டது. மாதுளம்பூவிலும் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன.
மாதுளம் பூவின் நன்மைகள் (Benefits of pomegranate flower)
- மாதுளம் பூவை அப்படியே சாப்பிட்டால் ரத்த விருத்தி அடையும். ரத்த சோகை உள்ளவர்கள் இதனை சாப்பிடலாம்.
- மாதுளம் பூக்களை உலர்த்திய பின்னர் பொடியாக்கி நாள் ஒன்றுக்கு மூன்று வேளையும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டால் இரு நாள்களில் இருமல் குறையும்.
- மாதுளம் பூவை பாலில் ஊறவைத்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
- அருகம்புல் சாறுடன் மாதுளம் பூ சாறு சேர்த்து சாப்பிட்டால் இருமல் சரியாகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகள் சரியாகும்.
- பெண்களுக்கு கருப்பை வலுவடைய மாதுளம் பூ சாறு சாப்பிடலாம்
- மாதுளம்பூவை நீரில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இத்துடன் சிறிது தேன், எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் தொண்டைப்புண், வயிற்றுப்புண் உள்ளிட்டவை சரியாகும்.
- மாதுளம் பூவை தலையில் வைத்துக்கொண்டால் தலைவலி தீரும். உடல் உஷ்ணமாக இருப்பவர்கள் உடலை குளிர்ச்சி அடையச் செய்ய மாதுளம்பூவை அப்படியே சாப்பிட்டு வரலாம்.
மேலும் படிக்க
சர்க்கரை வியாதி வராமல் தடுக்க எளிய வழி எது?
Be Alert: இந்த ஆரோக்கிய உணவுகளும் ஆபத்தாய் முடிய வாய்ப்பிருக்கு!