பொதுவாக நாம் உண்ணும் உணவின் சுவையை அறிய உதவுவதும் நமது நாக்குதான். அறுசுவைகளான இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளை நாம் உணர்வதற்கு நாக்கு பயன்படுகிறது. தொடர்ந்து உணவுகளை உட்கொள்ளும் போது நாக்கினில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற தொற்றுக் கிருமிகள் உருவாக வாய்ப்புண்டு. எனவே நாக்கை நாம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
நாக்கு என்பது நமது ஆரோக்கியத்தை காட்டும் கண்ணாடி என்றே கூறலாம்.இதன் காரணமாகத்தான் மருத்துவர்கள் நாக்கினையும் பரிசோதிக்கிறார்கள். நாக்கின் நிறத்தை கொண்டு நம் உடலில் தோன்றும் வியாதிகளை எளிதில் கண்டுப்பிடித்து விடலாம். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுடன் தொடர்புடையது. அதே போன்று சிலருக்கு நாக்கில் கரும்புள்ளிகள் தோன்றும்.
நாக்கின் நிறமும் நோயின் அறிகுறியும்
- ரோஸ் நிறம் - ஆரோக்கியத்தை குறிக்கும்
- இளம்சிவப்பு நிறம் - இதயம் மற்றும் ரத்த சம்பந்தமான நோய்
- அடர் சிவப்பு நிறம் - தொற்றுநோய் மற்றும் அலர்ஜி
- நீல நிறம் - சிறுநீரகம் பாதிப்பு
- வெளிர் வெள்ளை நிறம் - நோய் தோற்று
- சிமெண்ட் நிறம் - செரிமானம் மற்றும் மூலநோய்
- மஞசள் நிறம் - வயிறு அல்லது கல்லீரல், மஞ்சள் காமாலை
- காபி நிறப் படிவு - நுரையீரல் பாதிப்பு
ஆயுர்வேதம் சொல்லும் வாய் சுத்தம்
- காலை, மாலை என இருவேளையும் பற்கள் மற்றும் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.
- ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்ய வேண்டும். இது வாயில் உள்ள அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்யும்.
- வாரம் ஒரு முறையேனும் வேப்பங்குச்சி கொண்டு பல் துலக்கும் போது நுண்கிருமிகளை எளிதில் அழித்து பூஞ்சைகள் உருவாகுவதை தடுக்கும்.
- அதிகச் சூடான மற்றும் அதிகக் குளிரிச்சியான பதார்த்தங்களை சாப்பிட கூடாது.
- மிதமான சூடான நீரில் கல் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்க வேண்டும்.
- சாப்பாட்டுக்குப் பிறகு வாய்க் கொப்பளிப்பதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
இந்த எளிய முறைகளை வழக்கமாக்கி கொண்டால் பற்கள் மற்றும் நாக்கு அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும்.
Anitha Jegadeesan
Krishi Jagran