
தற்கால நடைமுறையில் உள்ள உணவுப் பழக்க வழக்கங்களால் பல நோய்கள் வரிசையில் வந்து நிற்கின்றன. இதனால், பலரும் மருத்துவமனைகளை நோக்கி தான் படையெடுத்து வருகிறார்கள். சில வியாதிகளை வெளியில் கூட சொல்ல முடியாது. அதில் ஒன்று தான் வாய்வுத் தொல்லை.
வாய்வுத் தொல்லை (Gas Trouble)
செரிமானம் அடைவதை கடினமாக்கும் அதிக புரதம், நார்ச்சத்து மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்போருக்கு அடிக்கடி வாய்வுத் தொல்லை உண்டாகும் வாய்ப்பு அதிகம். தவறான உணவுப் பழக்க வழக்கம் காரணமாகத் தான் இவர்களுக்கு இந்த வாய்வுத் தொல்லை ஏற்படுகிறது. ஆனால், வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய மற்றுமொரு முக்கியமான விஷயம் உள்ளது. அதைக் கேட்டால் அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போவீர்கள். அதாவது, மனிதர்கள் வெளியிடும் அபாண வாயுவானது, தீப்பிடிக்கும் தன்மையை கொண்டுள்ளது என்பது இங்கு எத்தனை பேருக்குத் தெரியும்?
வேதியியல் எரிப்பு வினை
நம் வயிற்றில் சுரக்கும் செரிமான அமிலம், நாம் சாப்பிடும் பல உணவுகளை செரிமானம் அடையச் செய்ய உதவுகிறது. இந்த அமிலத்தில் இருந்து வெளியாகும் வாயுவானது, சிறுகுடல் மற்றும் பெருங்குடலைத் தாண்டி மலக்குடலை வந்தடையும். இந்த வாயுவில் மீத்தேன் மற்றும் ஹைட்ரஜன் சல்ஃபேட் போன்றவை இருப்பதால், இவை ஆசனவாய் வழியாக வெளியேற்றப்படும் நேரத்தில், சிறிதளவு நெருப்புப் பொரி பட்டால், இந்த வாயுவில் வேதியியல் எரிப்பு வினை நடைபெறும்.
யூடியூப் தளத்தில் 'ஃபார்ட் ஃபயரிங்' என்ற பெயரில் பல காணொலிகள் உள்ளது. இவற்றில் இளைஞர்கள் பலரது உடலில் இருந்து வெளியேற்றப்படும் வாயுவை லைட்டர் அல்லது மெழுகுவர்த்தி போன்றவற்றில் காட்டி தீப்பற்ற முயற்சி செய்கின்றனர். இது மிகவும் ஆபத்தான முயற்சி மற்றும் தவறான செயலாகும். இதனால் பிட்டத்திலும், அவர்கள் அணிந்திருக்கும் பேன்டிலும் நெருப்பு பற்ற வாய்ப்புள்ளது. வாயுவை நாம் வெளியேற்றும் நேரத்தில், நெருப்பு பற்ற வாய்ப்புள்ள இடத்தில் இருந்து வெளியேறுவது தான் மிகவும் நல்லது.
மேலும் படிக்க
சைவப் பிரியர்களுக்கு புரதம் கிடைக்க இந்த உணவுகள் போதும்!
மதிய உணவுக்குப் பின் தூங்கினால் என்னவாகும்? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!