Health & Lifestyle

Saturday, 23 April 2022 10:23 AM , by: Elavarse Sivakumar

கோடை காலம் என அழைக்கப்படும், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில், உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது மிக மிக முக்கியம். இதற்கு, பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பலாப்பழத்தை உண்பது அவசியமாகும்.
அந்த வகையில், முக்கனிகளுள் ஒன்றான பலா, கோடை வெப்பத்தைத் துவம்சம் செய்ய நமக்கு நிச்சயம் உதவுகிறது. அதாவது, பலாப்பழத்தை உட்கொண்டால், கோடை காலத்தில் வரும் பல பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.

பொதுவாகக் கோடை காலமே பலாப்பழத்தை உட்கொள்ள ஏற்ற காலமாகும். குறிப்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கோடையில் பலாப்பழத்தை சாப்பிட வேண்டும். ஏனெனில் அது அவர்களுக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கின்றது.

நோய் எதிர்ப்பு சக்தி (immunity)

பலாப்பழத்தில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி, இரும்பு, நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் பலாப்பழத்தில் உள்ளன. எனவே இது நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், கோடை காலத்தில் அதிகமாக பலாப்பழத்தை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.

எலும்புகளை வலுவாக்கும் (Strengthens bones)

எலும்புகளை வலுவாக வைத்திருக்க கால்சியம் மிகவும் முக்கியமானது. பலாப்பழத்தில் கால்சியம், வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் ஆகியவை உள்ளன. இது எலும்புகளை வலிமையாக்குகிறது, உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. எலும்புகள் வலுவாக இருக்க, பலாப்பழத்தை உட்கொள்வது நல்லது.

நீரிழிவு நோய் (Diabetics)

உயர் இரத்த சர்க்கரையால் ஏற்படும் நீரிழிவு நோயில் பலாப்பழம் நுகர்வு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. உண்மையில், இதில் உள்ள நார்ச்சத்து உடலில் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் வெளியீட்டு வேகத்தை குறைக்கிறது மற்றும் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம், சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அதிக சிரமம் இருக்காது.

உடல் எடையை குறைக்க (To lose weight)

பலாப்பழத்தில் கலோரிகள் குறைவாக உள்ளன. இது எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்தும் மிக அதிகம். பலாப்பழத்தை உட்கொள்வதன் மூலம் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதுடன் உடல் எடையும் குறையும். பலாப்பழம் சாப்பிடுவது வளர்சிதை மாற்ற விகிதத்தையும் அதிகரிக்கிறது. இது எடை இழப்பு மேலாண்மைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தூக்கத்திற்கு உகந்தது

பலாப்பழத்தில் மெக்னீசியம் உள்ளது. இது உடலில் உள்ள நரம்பியக்கடத்திகளின் அளவைக் கட்டுப்படுத்தும். இது உங்கள் நரம்புகளை தளர்த்தி நன்றாக தூங்க அனுமதிக்கிறது. பலாப்பழத்தை அதிகமாக உட்கொள்வதன் மூலம் ஒருவருடைய சீரற்ற தூங்கும் பழக்கத்தை சரிசெய்ய முடியும்.

மேலும் படிக்க...

காதல் மனைவியை 'கர்ப்பம்' ஆக்க 15 நாள் பரோல்!

கர்ப்பிணிகளுக்கு மீன் நல்லதா? ஆய்வில் கண்டுபிடிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)