நம் முன்னோர்கள் பயன்படுத்திய, உடலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கை ரெப்ரிஜிரேட்டர் என்றால் மண்பானை (Pot) தான். மண்பானை தண்ணீர் சுத்தமானது, குளிர்ச்சியானது மட்டுமல்லாமல், உடலில் வெப்பத்தன்மையை குறைக்க கூடியது. பலவகையான நோய்களை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.
மண்பானை குடிநீர் (Clay Water)
குளிர் சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை குடிக்க, 15 நிமிடம் காத்திருக்க வேண்டும், ஆனால் மண் பானை தண்ணீரை எப்போது தாகம் எடுத்தாலும் குடிக்கலாம். பானையில் ஊற்றி வைக்கும் தண்ணீர் மட்டுமல்ல, பானையில் சமைக்கும் உணவுக்கும் தனிச்சுவையே உண்டு. மண்பானை சமையல் என்பது மரபு மட்டுமல்ல, உணவின் தன்மை மாறாமல் சுவையை அதிகரிக்க கூடியது.
உணவில் உள்ள அமிலத்தன்மையை சமன்படுத்தும் தன்மை கொண்டது, மண் பானை. நல்ல பசியையும், நல்ல துாக்கத்தையும் கொடுக்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவும். குழந்தையின்மை பிரச்னை ஏற்படாமல் தடுக்கும். மண்பானை உணவு, இரத்தக் குழாய்களை சீராக்க உதவும். உடல் சூட்டை தணிக்கும். இப்படி, இந்த இயற்கையான பாரம்பரியமிக்க மண்பானையின் மகத்துவத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.
கோடை வெயிலை, மண் பானையின் குளிர்ச்சியான தண்ணீரால் வெல்லலாம். மண்பானையை இன்றே வாங்கி, ஆரோக்கியம் நிறைந்த குளிர்ச்சியான தண்ணீரை குடியுங்கள். அதோடு, நாம் மண்பானை வாங்குவதால், மண்பானை தயாரிக்கும் குழவர்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படும்.
மேலும் படிக்க