மார்ச் மாதத்திலேயே கோடை வெயில் மண்டையைப் பொளக்க ஆரம்பித்துவிட்டது. அடிக்கிற வெயிலுக்கு, ஜில்லுன்னு தண்ணீர் குடிப்பது மட்டுமேப் பிடிக்கிறது.
இதன் காரணமாக, பெரும்பாலான மக்கள் பிரிட்ஜில் வைக்கப்பட்ட குளிர்ந்த நீரை குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் அவ்வாறு குளிர்ந்த நீரைக் குடிப்பது கடுமையான பக்கவிளைவுகளை நமக்கு ஏற்படுத்தும் என்பதுதான் நிஜம்.
எனவே பிரிட்ஜில் வைக்கப்பட்ட குளிர்ந்த நீரை குடிப்பதற்குப் பதிலாக, சாதாரண தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
செரிமான பிரச்சனை
குளிர்ந்த நீரை குடிப்பது உங்கள் செரிமான அமைப்பை பாதிக்கிறது. குளிர்ந்த நீரைப் பருகினால், வயிற்றில் பலவிதப் பிரச்னைகள் ஏற்படும்.
இதயத்துடிப்பு
குளிர்ந்த நீர், நம் இதயத் துடிப்பைக் குறைக்கும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குளிர்ந்த நீரை குடிப்பது இதயத்திற்கும் நல்லதல்ல என தைவான் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே குளிர்ந்த நீர் குடிப்பதை முடிந்த அளவு குறைக்க முயற்சி செய்யுங்கள், இல்லையெனில் இதயம் சார்ந்தப் பலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மலச்சிக்கல்
குளிர்ந்த நீரை குடிப்பதாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. உணவு உண்ட பிறகு குளிர்ந்த நீரை அருந்தினால், அதன் பிறகு உணவு செரிப்பது கடினமாகிவிடும்.
தலைவலி
குளிர்ந்த நீரைக் குடித்த பிறகு பலருக்கு தலைவலி வருவதை நம்மில் பலர் உணர்ந்திருக்கமுடியும். ஏனெனில், அவ்வாறு குளிர்ந்த நீரைக் குடிக்கும்போது, அந்த நீர் உணர்திறன் நரம்புகளை குளிர்விக்கும். இது தலைவலியை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இல்லை, இல்லை. கோடை காலத்தில் கட்டாயம் குளிர்ந்த நீர் தான் வேண்டும் என்று எண்ணுபவர்கள், மண் பானை தண்ணீரைக் குடிப்பது நல்லது.
மேலும் படிக்க...
இதைக் குடித்தால், வெயிலுக்கும் Goodbye- அதிக Weightக்கும் Goodbye!