பிரபல நிறுவனங்களின் தண்ணீர் பாட்டிலில் விநியோகம் செய்யப்படும் குடிநீர்தான் தூய்மையானது என நம்மில் பெரும்பாலானோர் நம்புகின்றனர். உண்மை அதுவல்ல. நாம் அருந்தும் சுத்திகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் குடி தண்ணீரிலும் பிளாஸ்டிக் போன்றத் துகள்கள் இருக்கின்றன என்பதை சமீபத்திய ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
இன்றையக் கால கட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டாலும், மக்களுடைய ஒத்துழைப்பு முழுமையாக இல்லாதக் காரணத்தால் முற்றிலுமாக தடுக்க முடியவில்லை.
எவ்வளவுதான் தடைகளைப் போட்டாலும், அவரவர் தங்கள் நிலைக்கு ஏற்ப பிளாஸ்டிக் பயன்பாட்டை மேற்கொள்ளத்தான் செய்கின்றனர்.
மண் கலையம்
வயல் வழியில், களத்து மேட்டில் வேலை பார்க்கும் விவசாயிகள் தங்களுடைய தேவைக்கு தேநீர் வாங்கிட கேரி பேக் எனப்படும் பிளாஸ்டிக் பையைத்தான் பயன் படுத்துகின்றனர். இது முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். மேலும் காட்டு வேலைக்கு சொல்லும்போது பிளாஸ்டிக் கேன்களில் குடிப்ப தற்காக தண்ணீர் கொண்டு செல்கின்றர். அந்த காலத்தில் மண் கலையத்தில் கொண்டு சென்று ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
பிளாஸ்டிக் தண்ணீர்
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள 11 முன்னனி நிறுவு களை சேர்ந்த 250 தண்ணீர் பாட்டிலை நியூயார்க்கில் ஆய்வு கூடத்தில் ஆய்வு செய்த போது அதிர்ச்சியான வெளியானது.அதாவது நீரில் பிளாஸ்டிக் துகள்களுடன் புரோபைலான், நைலான், பாலி எத்திலின் கலந்து இருந்தது தெரிய வந்தது. ஒரு லிட்டர் நீரில் 10 ஆயிரம் நுண்ணிய துகள் இருந்தது. 93 சதவிகித பாட்டில்களில் இருந்தது என்ற தகவல் தெரிய வந்துள்ளது. காலரா, வயிற்றுபோக்கு உட்பட பல தொற்று நோய்கள் தண்ணீர் மூலமாக பரவுவதால் நாம் வெளியிடங் களுக்கு செல்லும் போது அதிக விலை கொடுத்து பிளாஸ்டிக் கேன் வாட்டரை வாங்கி குடிக்கிறோம்.
இனி மேலாவது பிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலுமாக ஒழிக்க முயற்சிக்க வேண்டும். இந்த உலகம் பிளாஸ்டிக் மாசு இல்லாத உலகமாக மாற்ற நாம் ஒவ்வொருவரும் ஒத்துழைப்போம். களத்து மேடு, வயல் வேலைக்கு பாத்திரங்களில் தேநீர் வாங்கி பருகிடுவோம். கடல், குளம், எரி, மண், காற்று போன்ற அனைத்து இடங்களிலும் 5 மில்லி மைக்ரான் பிளாஸ்டிக் துகள்கள் நீக்கமற நிறைந்துள்ளன.
மாசற்ற பூமி
இவையாவும் கடைசியாக வந்து சேர்வது நம் மனித உடலில் தான். நெகிழி பயன்பாட்டை தவிர்ப்போம். சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாப்போம். வருங்கால சந்ததியினருக்கு வளமான மாசற்ற பூமியை ஒப்படைப்போம்.
தகவல்
அக்ரி சு.சந்திரசேகரன், வேளாண் ஆலோசகர்,
அருப்புக்கோட்டை 94435 70289.
மேலும் படிக்க...