Image credit : Pasumai Tazmilagam
இப்போது எல்லாம் நமது வீடு மற்றும் அலுவலகங்களில் சிறிய அளவிலான அழகழகான தாவரங்களை வளர்ப்பதை நாம் அனைவரும் விரும்புகிறோம். இயற்கையுடன் நெருங்குவதற்கான சிறந்த வழிகளில் இதுவும் ஒன்றாகும். வீடுகளில் வளர்க்கப்படும் தாவரங்கள் அறைகளில் இருக்கும் நச்சுக் காற்றை சுத்திகரித்து நல்ல தூய்மையான காற்றை நமக்கு வழங்குகிறது. இருப்பினும், தாவரங்கள் வளரும் போது சிறிய அளவிலான பூச்சிகளும் சேர்ந்தே வளர்கிறது. அவைகள், உங்கள் தாவரங்கள் மற்றும் இலைகளில் வாழ்வதைப் பார்க்கும் போது மிகவும் எரிச்சலூட்டும்.
இந்த பூச்சிகளை அழிக்க, பெரிய அளவிலான ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த நம்மில் பெரும்பாலோர் விரும்பமாட்டோம். எனவே இந்த பூச்சிகளை அழிக்க எளிதில் தயாரிக்கக்கூடிய சில இயற்கை பூச்சிகொல்லிகளை நாம் வீட்டிலேயே செய்யலாம். இவ்வாறு செய்யப்படும் வீட்டு பூச்சிக்கொல்லிகள் , தாவரங்களில் இருக்கும் பூச்சிகளை கொல்ல மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் இவை நமது தாவரங்களின் வளர்ச்சியையும் பராமரிக்கும்.
image credit : Wordpress.com
இயற்கையான வீட்டு பூச்சிக்கொல்லிகள்:
1. வேப்ப எண்ணெய்: (Neem Oil)
வேப்ப எண்ணெய் முற்றிலும் இயற்கையானது மற்றும் கரிமமானது. இந்த பாரம்பரிய பூச்சிக்கொல்லி வீட்டு தாவரங்களில் பொதுவான பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், கொல்லவும் மிக பயனுள்ளதாக இருக்கும். இது பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது
தயாரிக்கும் முறை :
ஒரு தேக்கரண்டி வேப்ப எண்ணெயை ஒரு லிட்டர் தண்ணீரில் கலக்கவும். தாவரங்களில் தெளிக்கவும். இலைகளில் தெளிக்க வேண்டாம். சிறந்த முடிவுகளுக்கு ஒவ்வொரு 15 நாட்களிலும் தெளிக்கலாம்
2. பூண்டு & சூடான மிளகு: (Garlic and Hot Pepper)
உங்கள் தாவரங்களிலிருந்து செடிப்பேன் (Aphid) நீக்க இந்த ஸ்ப்ரே மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பூண்டு மற்றும் சூடான மிளகு தெளிப்பு உங்கள் தாவரங்களை செடிப்பேன் சாப்பிடுவதை தடுக்கிறது.
தயாரிக்கும் முறை:
5-6 மிளகாய் மற்றும் 2-3 பூண்டு கிராம்பு எடுத்துக் கொள்ளுங்கள். பசை அல்லது பொடியாக (Paste or powder) அவற்றை அரைக்கவும். ஒரு தெளிப்பு பாட்டிலில் (Spray bottle) வடிகட்டி உதவியுடன் (Strainer) கலவையை வடிகட்டவும்.பாதிக்கப்பட்ட தாவரங்களில் தெளிக்கவும்.
Know more
ஆயுளை நீட்டிக்க இதை சாப்பிடுங்கள் போதும்!!
3. நீலகிரி எண்ணெய் (Eucalyptus oil) :
இது குளவிகள், தேனீக்கள், ஈக்கள் போன்றவற்றுக்கான அற்புதமான இயற்கை பூச்சிக்கொல்லி.
தயாரிக்கும் முறை
500 மில்லி தண்ணீரில் ¼ (கால்) டீஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெயைச் சேர்க்கவும். ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் கலவையை ஊற்றி நன்றாக கலக்கும் படி செய்யவும் . பாதிக்கப்பட்ட தாவரங்களில் ஒவ்வொரு 10-14 நாட்களுக்கும் தெளிக்கவும்.
Image credit by Pexels
4. மிளகு தெளிப்பு: (Pepper Spray)
மிளகுத்தூள் கேப்சைசின் என்ற வேதிப்பொருளை கொண்டிருக்கிறது, இது பூச்சிகளுக்கு ஆகாது.
மிளகு தெளிப்பு தயாரிப்பு முறை :
ஒரு ஸ்ப்ரே பாட்டிலில், 2 தேக்கரண்டி மிளகு மற்றும் 2 லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட தாவரங்களில் தெளிக்கவும். பிரச்சினை தீரும் வரை ஒவ்வொரு 10-15 நாட்களுக்கும் தெளிக்கவும்.
மாம்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
5. ஆல்கஹால்:( Alchol)
பூச்சிகளை விரட்ட ஆல்கஹால் கரைசல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆல்கஹால் தயாரிக்கும் முறை :
1-2 கப் 70 சதவிகித ஐசோபிரைல் ஆல்கஹால் (isopropyl alcohol) மற்றும் 1 லிட்டர் தண்ணீரை கலந்து ஒரு கரைசலை உருவாக்கவும். பாதிக்கப்பட்ட தாவரங்களில் கரைசலை தெளிக்கவும். ஒவ்வொரு 7-14 நாட்களுக்கு தெளித்து வந்தால் பூச்சிகள் காணாமல் போகும்.
கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள்!