பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 4 July, 2019 5:45 PM IST

பலரையும் வேதனையில் மூழ்க வைக்கும் ஒரு பிரச்சனை தான் குதிகால் வெடிப்பு இந்த குதிகால் வெடிப்பைப் போக்க பலரும் பல வழிகளை தேடிக் கொண்டிருப்பார்கள். அதில் பலரும் முயற்சித்த ஒன்று தான் குதிகால் வெடிப்பை போக்க கடைகளில் விற்கப்படும் க்ரீம். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும், குதிகால் வெடிப்பு போன பாடில்லை.

குதிகால் வெடிப்பைப் போக்க ஈஸி டிப்ஸ்

1) ஆப்பிள் சிடர் வினிகர்

குதிகால் வெடிப்பை சரிசெய்ய குதிகால் வெடிப்பு ஏற்ற ஒன்று. அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதனுள் கால்களை ஊற வைத்து, தேய்த்து கழுவ வேண்டும்.

2) கொக்கோ அல்லது ஷியா வெண்ணெய்

வெள்ளை வினிகருடன் சிறிது வெதுவெதுப்பான நீர் மற்றும் கொக்கோ அல்லது ஷியா வெண்ணெய் சேர்த்து கலந்து, அந்த கலவையினுள் குதிகாலை ஊற வைத்து பின் தேய்த்து கழுவ வேண்டும். இதனாலும் குதிகால் வெடிப்பு மறையும்.

3) ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலை வினிகருடன் சேர்த்து கலந்து, குதிகால்களை மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து, மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு தேய்த்து கழுவினால், வினிகர் இறந்த செல்களை நீக்கி, ஆலிவ் ஆயில் வறட்சியை நீக்கும்.

4) வெள்ளை வினிகர்

வெள்ளை வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அந்நீரில் கால்களை 20-25 நிமிடங்கள் ஊற வைத்து, மெருக்கேற்ற உதவும் கல்லைக் கொண்டு நன்கு தேய்த்து கழுவினால், இறந்த செல்கள் நீங்கி, வெடிப்புகள் மறைந்து குதிகால் மென்மையாக பட்டுப் போன்று இருக்கும்.

5) தயிர்

தயிரில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் மாய்ஸ்சுரைசிங் தன்மை, குதிகால் வெடிப்பை விரைவில் போக்கும். அதற்கு தயிரை வெள்ளை வினிகருடன் சேர்த்து கலந்து, அதனை குதிகாலில் தடவி நன்கு ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும்.

6) அரிசி மாவு

அரிசி மாவில், தேன், ஆலிவ் ஆயில் மற்றும் வினிகர் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை வறட்சியடைந்த பாதங்களில் தடவி உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தவறாமல் செய்து வந்தால், பாதங்கள் மென்மையாக, வெடிப்பின்றி இருக்கும்.

7) தேன்

வினிகரில் தேன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு குதிகாலை மசாஜ் செய்து நன்கு உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.

https://tamil.krishijagran.com/health-lifestyle/medicinal-properties-of-honey/

https://tamil.krishijagran.com/health-lifestyle/benefits-of-oil-pulling/ 

 

English Summary: Easy tips to help you to get rid of cracks and get soft feet
Published on: 27 December 2018, 02:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now