Health & Lifestyle

Monday, 15 August 2022 04:15 PM , by: Elavarse Sivakumar

வீட்டில் இருந்தபடி அலுவலகப் பணிகளைப் பார்க்கும் வசதி வந்தது முதலே, உடல் எடையும் எக்குத்தப்பாக ஏறி வருகிறதே என்று கவலைப்படுபவரா நீங்கள்? கவலைவேண்டாம், இரவு தூங்கும் முன்பு இந்த 4 உணவுகளைச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொண்டால், தொப்பை ஓடிப்போகும்.

அதிகரித்து வரும் உடல் எடையை குறைப்பது யாருக்கும் எளிதானது அல்ல, ஏனென்றால் இதற்கு உடற்பயிற்சியுடன், உணவையும் பழக்க வழக்கங்களையும் கட்டுப்படுத்த வேண்டும். இரவில் சாப்பிடும் உணவே நமது எடை குறைப்புக்கும் அதிகரிப்புக்கும் அடிப்படையாகிறது.

நோய் அபாயம்

நீரிழிவு, மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிப்பதால், எடை அதிகரிப்பு பல பிரச்சனைகளின் தொடக்கமாக கருதப்படுகிறது. இதுமட்டுமின்றி, வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு அதிகரிப்பதால், உடலின் ஒட்டுமொத்த வடிவமும் கெட்டுப் போகிறது.

அலட்சியம் வேண்டாம்

நொறுக்குத் தீனிகள், எண்ணெய் உணவுகள், துரித உணவுகள் போன்ற நமது ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகளை நாம் அடிக்கடி சாப்பிடுகிறோம். அதே போல் பிஸியான வாழ்க்கை முறையாலும் நமது ஆரோக்கியத்தை நாம் அலட்சியப்படுத்துகிறோம்.

தயிர்

இரவில் சாப்பிட்ட பின் கண்டிப்பாக தயிர் சாப்பிட வேண்டும். கலோரிகள் மற்றும் புரதச்சத்து அதிக அளவில் உள்ள தயிர், தசைகளுக்கும் பலம் தரும். தயிரில் உள்ள நுண்ணூட்டச்சத்து செரிமானத்தை சீராக பராமரித்து உடல் எடையையும் குறைக்கிறது.

பாதாம்

பல சமயங்களில், இரவில் திடீரென பசி எடுக்கும், சில காரணங்களால் தாமதமாக தூங்குபவர்களுக்கு இது அடிக்கடி நிகழ்கிறது. அப்படி இரவில் பசிக்கும்போது பாதாம் சாப்பிடலாம், இது பசியை அடக்குவதோடு, ஆரோக்கியத்தை நிச்சயமாக கெடுக்காது என்பதை உறுதியாக சொல்லலாம். பாதாமில் காணப்படும் பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. அது மட்டுமல்ல, பாதாமில் கலோரிகளும் குறைவாக உள்ளன.

வாழைப்பழம்

வாழைப்பழம் சாப்பிடுவது எடை அதிகரிக்கும் என்று பெரும்பாலும் நம்பப்படுகிறது, ஆனால் எடையைக் குறைக்கும் பல ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து காரணமாக, நீண்ட நேரம் பசி இருக்காது, இது எடை குறைக்க உதவுகிறது.

மேலும் படிக்க...

நீலகிரியில் பூத்துக்குலுங்கும் பச்சை ரோஜாக்கள்!!

பாரம்பரிய நெல் வகைகளை சேகரித்த பெண்ணுக்கு விருது!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)