வெள்ளை அரிசி சாதம், ரத்த சர்க்கரையின் அளவை வேகமாக அதிகரிக்கச் செய்யும். அதே சமயம், 'பாலீஷ்' செய்யப்படாத பிரவுன் அரிசியில், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து அதிகம் உள்ளன. உணவில் உள்ள கார்போ ஹைட்ரேட், ரத்த சர்க்கரையின் அளவை, எவ்வளவு விரைவில், எந்த அளவில் அதிகரிக்கச் செய்கிறது என்ற அடிப்படையில் கணக்கிடப்படுவது, 'கிளைசிமிக்' குறியீடு. இதுவும் பிரவுன் அரிசியில் மிகவும் குறைவு. எனவே, சர்க்கரை கோளாறு ஏற்படும் அபாயத்தை பிரவுன் அரிசி சாதம் கணிசமாக குறைக்கும். இதைப் பற்றி விளக்குகிறார் மருத்துவர் மோகன்.
பிரௌன் அரிசி (Brown Rice)
முந்திரி பருப்பு குறித்த என் ஆய்வுக் கட்டுரை, சர்வதேச இதழான, 'நியூட்ரிஷன்'னில் வெளியாகி உள்ளது. என் ஆராய்ச்சியின் முடிவு இது தான். 'சர்க்கரை கோளாறு, உடல் பருமன் உடையவர்கள், 'நட்ஸ்' அருகிலேயே போகக் கூடாது; காரணம், அதில் உள்ள அதிகப்படியான கலோரி உடல் எடையையும், ரத்த கொழுப்பையும் அதிகரிக்கச் செய்யும் என்று நினைத்தனர்.!' ஆகையால், பிரௌன் அரிசி சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வருவது உறுதி.
ஆனால், கடந்த, 10 ஆண்டுகளாக நட்ஸ் குறித்த பல ஆராய்ச்சிகள், 'இது தவறு' என்று உறுதி செய்துள்ளன. ஆனாலும், மேற்கத்திய நாடுகளில் அதிகம் பயன்படுத்தும் பாதாம், வால்நட், பிஸ்தா போன்றவை குறித்த ஆராய்ச்சியே அதிகம் உள்ளது.
முந்திரி (Cashew)
நம்முடைய முந்திரி குறித்து வெகு சிலதே உள்ளன. என் ஆய்வின்படி, சமைக்காத முந்திரியை தினமும் சாப்பிடுவது, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். தவிர, இதில் ஆன்டி ஆக்சிடென்ட், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. 12 நாட்கள் தினமும், 30 கிராம் முந்திரி பருப்பு சாப்பிடக் கொடுத்ததில் இது உறுதியாகி உள்ளது.
டாக்டர் வி.மோகன்
டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு மையம்,
சென்னை.
மேலும் படிக்க
கீரை விவசாயம: குறைந்த நாட்களில் அதிக மகசூல் பெறுவது எப்படி?
சோதனையில் சிக்கிய கெட்டுப்போன இறைச்சி: உணவகத்தில் நம்பி சாப்பிடலாமா?