நாளுக்கு நாள் குளிரின் தன்மை அதிகரித்து வரும் நிலையில், அத்திப்பழத்தை உங்களது உணவு முறைகளில் ஒன்றாக எடுத்துக்கொள்வது பல்வேறு வகையில் நன்மையளிக்கும். அத்திப்பழமானது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது, எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, கொழுப்பைக் குறைக்கிறது மற்றும் நீரிழிவு நோயைத் தடுக்க உதவுகிறது.
உடலின் வெப்பத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், குளிர்காலத்தில் நமது ஆரோக்கியத்தையும் பலப்படுத்தும் ஊட்டச்சத்தை தரும் பழங்களில் முதன்மையானதாக அத்திப்பழம் கருதப்படுகிறது. அவற்றின் சில நன்மைகளை உங்களுக்காக இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
ஆற்றலை அதிகரிக்கிறது: குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகளால் நிரம்பியுள்ளது அத்திப்பழம். இதனால் விரைவான மற்றும் நீடித்த ஆற்றலை நமக்கு வழங்கும் தன்மைக் கொண்டதாகவும் அத்திப்பழம் விளங்குகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: அத்திப்பழங்களில் வைட்டமின் சி, துத்தநாகம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலம் நிரம்பியுள்ளது. இதனால் சீதோஷன நிலை மாற்றத்தினால் உண்டாகும் சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்க உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது: குளிர்காலத்தில் செரிமான தன்மைக்கு அதிக ஆற்றல் தேவைப்படும். அத்திப்பழங்கள் நார்ச்சத்து நிறைந்ததாக இருப்பதால், இயற்கையான செரிமானத்திற்கு உதவியாக செயல்படுகிறது. அவை வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவிக்கின்றன, மலச்சிக்கலைத் தடுக்கின்றன மற்றும் ஆரோக்கியமான குடலுக்கு பங்களிக்கின்றன.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: வெப்பநிலை குறையும் போது, உங்கள் எலும்புகளை பராமரிப்பது முக்கியமானது. அத்திப்பழம் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்களின் அற்புதமான மூலமாகும், அவை எலும்பு ஆரோக்கியத்திற்கு வலுவூட்டம் தன்மைக்கொண்டது. குளிர் காலத்திலும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க இவை உதவும்.
கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது: அதிக கொலஸ்ட்ராலுக்கு எதிரான நடவடிக்கைகளில் அத்திப்பழம் நல்ல பயன்களைத் தருகிறது. பெக்டின், அத்திப்பழத்தில் காணப்படும் ஒரு வகை கரையக்கூடிய நார்ச்சத்து, செரிமான அமைப்பில் அதிகப்படியான கொழுப்புடன் பிணைப்பதன் மூலம் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது, மேலும் அதை உடலில் இருந்து நீக்குகிறது.
நீரிழிவு தடுப்பு: இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கருத்தில் கொண்டவர்களுக்கு, அத்திப்பழம் தீங்கு விளைவிக்காத இயற்கையான இனிப்பை வழங்குகிறது. அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இது நீரிழிவு நோயைத் தடுக்க அல்லது நிர்வகிக்க விரும்பும் நபர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகவும் விளங்குகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை: குளிர்காலம் என்பது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு எதிராக நமது உடலுக்கு கூடுதல் ஆற்றல் தேவைப்படும் காலமாகும். அத்திப்பழங்கள், செல்லுலார் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகிறது.
அத்திப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வயதானதை எதிர்த்துப் போராடுவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் பங்களிக்கின்றன. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடப்பாண்டில் மிகவும் குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வடமாநிலங்களில் பல பகுதிகளிலும், குளிர் வாட்டி வதைக்கும் நிலையில் அவற்றை சமாளிக்க உதவுவதோடு, உடலுக்கும் பல வகைகளில் நன்மை விளைவிக்கும் பழமாக அத்திப்பழம் விளங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
Read more:
நட்ட மாத்திரத்தில் லாபம்- டர்க்கி பிரவுன் ரக அத்தி சாகுபடி முறைகள்!
மீன் வளர்ப்பில் ஈடுபட ஆர்வமா? அரசின் 5 மானியத்திட்டங்கள் உங்களுக்காக