Health & Lifestyle

Wednesday, 22 September 2021 05:07 PM , by: Aruljothe Alagar

Eating pears can help you lose extra weight!

எடையை குறைக்க குறிப்புகள்: பேரீச்சம்பழம் அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துகளின் சக்தி மையம் என்று அழைக்கப்படுகிறது. இது பொட்டாசியம், பெக்டின் மற்றும் டானின்கள் போன்ற உறுப்புகள் மற்றும் பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது யூரிக் அமிலத்தைக் கரைத்து வாத நோய்களைக் குணப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது மற்றும் மலச்சிக்கலி இருந்து நிவாரணம் தருகிறது.

பேரிக்காயில் இரத்த சர்க்கரை அளவை அப்படியே வைத்திருக்க உதவுகிறது. இது இதயத்தின் நிலையை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதை உறுதி செய்கிறது. பேரிக்காயில் உள்ள குறைந்த கலோரி எடை குறைக்க ஒரு சிறந்த மற்றும் அத்தியாவசிய ஊட்டசத்தாகும்.

உடல் எடையை குறைப்பதில் பேரிக்காயின் பங்கு:

நார்ச்சத்து நிறைந்தது

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிசின் (2001) உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியத்தின்படி, ஒரு நடுத்தர, பேரிக்காய் ஆறு கிராம் நார்சத்தை அளிக்கிறது, 50 வயதிற்குட்பட்ட ஒரு பெண்ணின் தினசரி தேவையில் சுமார் 24%. இது நார் நிரம்பியுள்ளது செரிமானம் மெதுவாக இருப்பதால் வயிறு நிரம்பியே இருக்கும்.

குறைந்த கலோரி

எடையை குறைக்க கலோரிகள் முக்கிய ஆதாரமாக உள்ளது. எடை குறைக்கும் பயணம் கலோரிகளைக் குறைப்பது பற்றி குறிப்பிடாமல் முழுமையடையாது. இந்த பழம் 100 கிராமுக்கு 56 கலோரிகளைக் கொண்டுள்ளது மற்றும் எடையை குறைப்பதற்கு சரியான மற்றும் நம்பகமான துணை இதுவாகும்.

நீர் உள்ளடக்கம் நிறைந்தது

பேரிக்காயில் 84% தண்ணீரை கொண்டுள்ளது. பேரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாக இருந்தாலும் கலோரி குறைவாக உள்ளது. இந்த காரணத்தினால் பேரிக்காய் உடல் எடை குறைப்பதற்கு நல்ல காரணியாகும்.

செரிமானத்திற்கு உதவுகிறது

பேரிக்காய் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை எதிர்த்துப் போராடுகிறது. அதிக நீர் உள்ளடக்கம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால், செரிமான சக்தி எடை இழக்க எளிதானது. ஆரோக்கியமான குடல் மற்றும் நல்ல செரிமான அமைப்பு எப்போதும் ஆரோக்கியமான எடை குறைப்புக்கு உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க...

பெயரிலேயே காய் கொண்ட பழம் பேரிக்காய்!!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)