Health & Lifestyle

Friday, 24 September 2021 08:27 AM , by: Elavarse Sivakumar

Credit : Scary mommy

நாம் ஒவ்வொருவரும் தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், 8 வகை ஆரோக்கியம் உறுதியாகிவிடும். அப்படி செய்வதால், பின்வரும் நன்மைகள் நம்மை வந்துசேர்கின்றன.

8 டம்ளர் தண்ணீர் (8 tumblers of water)

தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. எனினும் சிலருக்கு இந்த அளவு குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ தேவைப்படலாம். ஆனால் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதைக் கண்டறிய சுலபமான வழி உண்டு.

​நீர்ச்சத்து (Hydration)

உடலுக்கு எடுத்துக்கொள்ளும் குடிநீர் என வரும்போது, நாம் வெளியேற்றும் சிறுநீரின் அளவு குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும். சிறுநீர் மஞ்சள் அல்லது அடர்ந்த நிறமாக இருந்தால் நீங்கள் இன்னும் அதிக தண்ணீரை குடிக்க வேண்டும். போதுமான தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய இதை முயற்சிக்கவும்.

உடற்பயிற்சி (Exercise)

போதுமான அளவுக்கு தண்ணீர் குடிப்பது, தீவிரமான உடற்பயிற்சி செய்ய நம் உடலைத் தூண்டுகிறது. அதாவது தசைகள் சரியாக செயல்பட சோடியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எல்க்ட்ரோலைட்டுகளின் நல்ல சமநிலை தேவை. சரியான நீரேற்றம் இல்லாமல் எலக்ட்ரோலைட்டுகளை எளிதில் பரிமாறிக்கொள்ள முடியாது. மேலும் தசைகள் தசைப்பிடிப்புக்கு ஆளாக வாய்ப்புள்ளது.

தசையை வளர்ப்பதில் வொர்க் அவுட் செய்தால், தசைகள் தண்ணீர் இல்லாமல் இருக்கும் போது அந்த தீவிரத்தை பெற முடியாது. நீரேற்றமாக இருக்க உடல் செயல்பாடுகளுக்கு முன் எட்டு அவுன்ஸ் தண்ணீர் குடிக்கவும்.

​சிறுநீரகங்கள் (Kidneys)

உடலில் இருந்துக் கழிவுகளைத் திரவ வடிவில் வெளியேற்றும் வேலையைச் செய்யும் சிறுநீரகங்கள், சரியாக இயங்குவதற்குப் போதுமான தண்ணீர் தேவைப்படுகிறது. நீண்ட நாட்கள் நீரிழப்புடன் இருந்தால் சிறுநீரகங்கள் வேலை செய்வது கடினமாக இருக்கக்கூடும்.

சிறுநீர் உற்பத்திக் குறைவாக இருக்கும்பட்சத்தில், சிறுநீரகங்கள் சிறுநீரைக் குவிக்கும் பணியை சிரமப்படுத்துகின்றன. அதாவது தாதுக்களின் அதிக செறிவு உண்டாகலாம்.

ஆற்றல் (Energy)

குடிக்கும் தண்ணீர், நம் ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது. உடலுக்கு ஆற்றல் அளவை பராமரிக்க தண்ணீர் தேவை. அதனால் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் நீங்கள் மந்தமாக இருப்பீர்கள்.

சருமம் பளபளக்கும் (The skin glows)

சரும செல்கள் போதுமான தண்ணீரைப் பெறாத போது, அவை வாடி சுருங்கத் தொடங்கும். ஆனால் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்தால் சருமம் அதிக பளபளப்பாகவும் மென்மையாகவும் வைத்திருக்கும். நீரிழப்பின் போது உண்டாக்கும் நுண் கோடுகளை அழித்துவிடும். இது சருமத்தை இளமையாக வைத்திருக்க செய்யாது.

அதேநேரத்தில் வயதாவதற்கு முன்பே உண்டாகும் சுருக்கத்தைப் போக்க நாம் அனுதினமும் சரியான அளவுத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

மலச்சிக்கல் (Constipation)

உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் ஒரு பகுதியில் நீரேற்றம் இல்லாவிட்டால் மலத்தை வெளியேற்றுவது கடினமாக இருக்கும். உங்கள் உடலில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிக தண்ணீர் தேவைப்படும் போது, அது குறைவான அத்தியாவசிய பகுதிகளிலிருந்து எடுக்கும்.

செரிமான அமைப்பிலிருந்து எடுத்து செல்லும். அதே நேரம் நீரேற்றமாக இருப்பதன் மூலம் மலச்சிக்கலை தவிர்க்கலாம். இதன் மூலம் மலச்சிக்கல் வராமலே இருக்க முடியும்.

ஜலதோஷம் (Cold)

தண்ணீர் நிறைவாக குடிப்பதன் மற்றொரு நன்மை ஜலதோஷத்தை தடுக்கவும் தீவிரமாகாமலும் தடுக்கும். மருத்துவர் அதிக திரவ பானங்களை எடுத்துகொள்ள அறிவுறுத்த காரணம் உண்டு. உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது உடலில் இருக்கும் கிருமிகளுக்கு எதிராக தாக்குதல் தொடங்க வேண்டும்.

நோய்க்கிருமிகளை வெளியேற்றும் உடலின் முயற்சியில் உங்கள் மூக்கில் திரவமாக வெளியேறும். போது நோயை எதிர்த்து போராடுவதற்கு வலுவான செயல்பாடு தேவை. அதற்கு நீரேற்றம் நிறைவாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டியது அவசியம்.

தலைவலி (Headache)

தண்ணீரைக் குறைவாக எடுத்துக்கொண்டால், தலைவலி பிரச்னை ஏற்படும். உடலுக்குத் தேவையான திரவங்கள் இல்லாத போது அது முக்கியமான ஊட்டச்சத்தை எளிதில் மாற்ற முடியாது. அதற்கு தலைவலி எச்சரிக்கை அறிகுறியாகும். உடலில் தவறு நடப்பதற்கான அறிகுறியாக உடல் நமக்கு உணர்த்துகிறது.

வியர்வை (Sweat)

உடல் செயல்பாடுகளின் போது நெற்றியில் வியர்வை வருவது நல்ல விஷயம். இது உங்கள் உடல் சாதாரண வெப்பநிலையை பராமரிக்கும் வேலையை செய்கிறது. அதே நேரம் போதுமான தண்ணீர் குடிக்கவில்லை என்றால் தீவிரமான உடற்பயிற்சியின் போது வியர்வை வெளியேறாமல் இருக்கலாம். சுறுசுறுப்பாக இருந்த பிறகும் வியர்வை வெளியேறாமல் இருந்தால் அது நீரிழப்பை குறிக்கும் அறிகுறியாகும்.
​இதயம்
தசையைப் போலவே இதயமும் சரியாக செயல்பட போதுமான அளவுக்கு தண்ணீர் தேவை. போதுமான தண்னீர்குடிக்கவில்லை என்றால், இதயத்தால், பம்ப் செய்ய முடியாது. இதனால் இதயத்துடிப்பு அதிகரிக்கும். மற்றும் இரத்த அழுத்தம் குறையும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தண்ணீர் குடிப்பதன் நன்மைகளில் மிக முக்கியமானது.

மேலும் படிக்க...

பலவிதப் பக்க விளைவுகளுக்கு வித்திடும் பச்சைக் காய்கறிகள்!

வீட்டில் இருந்தே மாதம் ரூ.60,000 சம்பாதிக்கலாம்- SBI யின் அரிய வாய்ப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)