Health & Lifestyle

Friday, 15 July 2022 07:52 AM , by: Elavarse Sivakumar

நாம் அணியும் ஆடையின் முக்கியத்துவதை உணர்த்துவதற்காகவே, ஆள் பாதி, ஆடை பாதி என்றார்கள். அனைவருமே ஆன்லைனில் லெகின்ஸ் போன்ற எலாஸ்டிக் அடைகளை விரும்பி வாங்கி அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அனைவரும் அணிகிறார்களே என்று எண்ணும் இளம் பெண்கள், இந்த ஆடை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காதா என சந்திக்க ஏனோ மறந்துவிடுகின்றனர்.

அதனால், இவர்கள் அணியும் பெரும்பாலான ஆடைகள் இறுக்கமாகவும், உடலை அழுத்தியவாறும் இருக்கின்றன. இத்தகைய எலாஸ்டிக் ஆடைகளை தொடர்ந்து அணிவதால் பல ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

ரத்த ஓட்டம்

எலாஸ்டிக் ஆடைகள் உடலை ஒட்டியபடியே இருக்கும். இதனால், உடலில் இறுக்கம் ஏற்பட்டு, செல்கள் சுவாசிப்பதில் இடையூறை உண்டாக்கும். உடல் முழுவதும் செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். எலாஸ்டிக் ஆடைகள் அணிவதால், நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு, காலப்போக்கில் உடல் உறுப்புகளின் இயக்கத்தில் மந்த உணர்வை தரும்.

சுவாசம்

எலாஸ்டிக் கொண்ட உள்ளாடைகள், ஆடைகளை தினசரி பயன்படுத்தும்போது அவை உடலை இறுக்கிப் பிடிப்பதால் எளிதாக மூச்சுவிட முடியாது. இதனால் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவு இயல்பாகவே குறைந்துவிடும். மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு, சுவாசம் சார்ந்த பிரச்சினைகள் வரலாம்.

சருமம்

எலாஸ்டிக் ஆடைகள் இறுக்கமாக இருப்பதால் சருமத்துக்கு காற்றோட்டம் செல்வது குறைகிறது. இதனால், ஈரப்பதம் குறைந்து, சருமத்தில் வெடிப்பு, கொப்புளங்கள், பூஞ்சைத் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. எலாஸ்டிக் ஆடைகள் அணியும் போது உடலில் உண்டாகும் வியர்வை சரியாக வெளியேறாமல் சருமத்தில் அப்படியே படிந்துவிடும். இது சருமத் தொற்றை ஏற்படுத்துவதுடன், உடல் கழிவுகள் வெளியேறுவதையும் தடுக்கும்.

வயிற்றுக் கோளாறுகள்

பெரும்பாலான பெண்கள் உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி, விளையாட்டு போன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் போது இறுக்கமான எலாஸ்டிக் ஆடைகளையே பயன்படுத்துகிறார்கள். இது வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளில் அழுத்தம் கொடுத்து, அங்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுப்பதுடன், செரிமானக் கோளாறு, பசியின்மை, வயிற்று வலி போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.

உடல் அமைப்பில் பாதிப்பு

எலாஸ்டிக் ஆடைகளைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது அதன் வடிவமைப்புக்கேற்ப, உடல் அமைப்பிலும் மாற்றம் ஏற்படக்கூடும். இதனால், உடல் தோற்றம் மாறுபட்டு, சில நேரங்களில் உடல் பருமன் பிரச்சினைக்கும் வழிவகுக்கும்.

முதுகு வலி

முதுகு மற்றும் தோள்பட்டைப் பகுதிகளில் உள்ள தசைகளில் அழுத்தம் ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள நரம்புகளில் பாதிப்பு ஏற்படும். இதனால், தலை மற்றும் கழுத்துப் பகுதியை இணைக்கும் இடத்தில் வலி, முதுகுத் தண்டுவடத்தில் அழுத்தம் அதிகமாகி முதுகு வலி, தோள்பட்டையில் வலி போன்றவை ஏற்படலாம். எனவே மற்றவர்கள் அணிகிறார்களே என்று காப்பி அடிக்காமல், உடலுக்கு கேடு விளைவிக்காத பருத்தி ஆடையைத் தேர்வு செய்து அணிவதே சாலச் சிறந்தது.

மேலும் படிக்க...

பெண் பயணிகளுக்காக பிங்க் பஸ்!

மனைவியை ஏமாற்ற பாஸ்போர்ட் கிழிப்பு - கைது செய்த போலீஸார்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)