Health & Lifestyle

Friday, 07 January 2022 10:17 AM , by: Elavarse Sivakumar

கோடைகாலத்தோடு ஒப்பிடும்போது குளிர்காலம் மனதிற்கும், உடலுக்கும் இதமான உணர்வை ஏற்படுத்தும். இருப்பினும், பொதுவாகவே குளிர்காலம், அதிக நோய்களை நமக்குப் பரிசளிக்கும் காலம் என்பதால், ஆரோக்கியத்தில் நாம் சற்றுக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதுக் கட்டாயம்.

ஆரோக்கியம் (Health)

அந்த வகையில், சில பழங்கள் மற்றும் காய்கறிகள் விலை, குளிர்காலத்தில் மலிவானவையாக இருந்தாலும், குணத்தில் மிகவும் சிறந்தவை ஆகும். எனவே குளிர்காலத்தில் இவற்றை உணவில் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

குளிர்காலம் கடுமையான குளிர்ச்சியை அளிக்கிறது. மக்கள் குளிரில் இருந்து தப்பிக்க நெருப்பு மற்றும் சூடான ஆடைகளை போடுகின்றனர். ஆனால் இந்தக் குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, சூடான ஆடைகள் மட்டுமல்ல, சில சூடான பொருட்களையும் உட்கொள்ள வேண்டும். ஆனால் இந்த 4 பொருட்களை மட்டும் குளிர்காலத்தில் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொண்டால் போதும். உடல் சூடாக இருக்கும், குளிர்கால நோய்களும் அண்டாது.

இஞ்சி (Ginger)

குளிர்காலத்தில் இஞ்சி மிகவும் பலன் அளிக்கக்கூடியது. தேநீரில் இஞ்சி சேர்த்து குடிக்கும் வழக்கம் மிகவும் நல்லது. இஞ்சியைத் தண்ணீரில் கொதிக்க வைத்து பானமாக அருந்தலாம். காய்கறிகள், சாலடுகள், என அனைத்திலும் கலந்து பயன்படுத்தலாம்.

ஏனெனில் இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பல சத்துக்கள், உடலுக்கு வெப்பத்தைத் தருவதுடன் மட்டுமின்றி, மேலும் பல நன்மைகளையும் கொடுக்கிறது.

பூண்டு (Garlic)

குளிர்காலத்தில் உடலில் வெப்பத்தை பராமரிக்க, உணவில் பூண்டை சேர்க்க வேண்டும். பூண்டுப் பற்களை நறுக்கி உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் சூடாக இருக்கும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் பூண்டு உதவுகிறது.

சிவப்பு மிளகாய் (Red chilly)

சிவப்பு மிளகாய் மிகவும் சூடாக இருக்கும்.பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மிளகாய், குளிர்காலத்தில் உடலைச் சூடாக வைத்திருக்க உதவும். இரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்கவும் மிளகாய் உதவுகிறது.

பேரிச்சம்பழம் (Dates)

பேரிச்சம்பழம் உடலுக்கு சூடு கொடுக்கும் உணவாகும். ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பேரிச்சம்பழம் (Fruits for Health), உடலுக்குச் சூடு தருவதுடன், எலும்புகளை வலுப்படுத்தவும், ரத்த பற்றாக்குறையைப் பூர்த்தி செய்யவும் உதவுகிறது. இதனை உட்கொள்வதால் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கிறது.

மேலும் படிக்க...

Be Alert: இந்த ஆரோக்கிய உணவுகளும் ஆபத்தாய் முடிய வாய்ப்பிருக்கு!

10, 12 வகுப்புகளுக்குக் கட்டாயம் பொதுத்தேர்வு- அமைச்சர் அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)