Health & Lifestyle

Sunday, 15 May 2022 08:57 AM , by: Elavarse Sivakumar

முக்கனிகளுள் ஒன்றான மாம்பழம் எல்லோராலும் விரும்பப்படும் பழம். அதன் ருசியே இதற்கு சாட்சி. மாம்பழங்களைக் கோடை காலத்தில் ருசிக்காவிட்டால், அடுத்த ஆண்டுவரைக் காத்திருக்க வேண்டும். எனவே கோடை காலத்தில் தவறாது மாம்பழங்களை வாங்கி ருசிக்க வேண்டும் என்பதில் அனைவருமே ஆர்வமாக இருப்போம். சுவைக்காக மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும் மாம்பழத்தில், பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.

அப்படி வாங்கும் பழம் கார்பைடு கல்லால் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழமா? என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது மிக மிக முக்கியம். ஒரு சில வியாபாரிகள் இலாப நோக்குடன் 'கார்பைட் கல்' வைத்து, செயற்கையாக பழுக்க வைக்கின்றனர்.

இவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். இதன் மூலம், தலைச்சுற்றல், தூக்கம், மனக் குழப்பம் மற்றும் ஞாபக மறதி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

அதேநேரத்தில் கால்சியம் கார்பைடு ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம், நரம்பியல் அமைப்பை பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், இது ஹார்மோன் செயல்பாட்டில் பிரச்சினையை ஏற்படுத்துகின்றன.
எனவே இயற்கை முறையில் பழுத்த ஆரோக்கியமான பழங்களை உண்பது அவசியமாகும். அவ்வாறு மாம்பழங்கள் இயற்கையாக பழுத்திருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய இந்த வழிமுறையைப் பின்பற்றலாம்.

செய்முறை

மாம்பழங்களை ஒரு வாளி தண்ணீரில் போடும் போது மாம்பழங்கள் மூழ்கினால் அவை இயற்கையாகவே பழுத்த பழம் என அறிந்து கொள்ளலாம் . மாறாக பழம் நீரில், மிதந்தால் அவை செயற்கையாக பழுக்கவைக்கப்பட்டவை என அறிந்து கொள்ளலாம்.

செயற்கையாக பழுத்த மாம்பழத்தில், பச்சை நிற திட்டுகள் இருக்கலாம் என்கின்றனர். இந்த திட்டுகள் மஞ்சள் நிறத்தில் இருந்து வேறுபட்டதாக இருக்கும். 

மேலும் படிக்க...

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)