அத்திப்பழம் நம் உடலுக்கு அதிகளவில் நலன்களை அளிக்கும் பழமாகும். தமிழ்நாட்டில் பெரும்பாலும் உலர்பழ மற்றும் ஜூஸ் வடிவில் உட்கொள்ளப்படுகின்றது.
அத்திப்பழம் சுவையான மற்றும் சிறந்த ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பழமாகும். இதில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை அளிக்கும் ஊட்டச்சத்து பண்புகள் உள்ளன. ஆனால், அனைத்து விஷயங்களிலும் நன்மைகளும் தீமைகளும் இருக்கும் என்பதற்கு அத்திப்பழமும் ஒரு நல்ல உதாரணம்.
அத்திப்பழத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சில பண்புகள் காணப்படுகின்றன. அத்திப்பழங்களை அதிக அளவில் சாப்பிடுவதால் சிலர் உடல் நல பிரச்சனைகளால் அவதி படலாம். ஆகவே அளவுக்கு மிஞ்சாமல் அத்திப்பழத்தை எடுத்துக்கொள்வது நல்லது. அத்திப்பழங்களை அளவுக்கு மீறி சாப்பிட்டால், பல வயிற்று பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அத்திப்பழங்களை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பற்றி இங்கு காணலாம்.
வயிறுப் பிரச்சனை:
அதிக அத்திப்பழங்களை உட்கொவதால் வயிறு மந்தமாகிறது. இதன் காரணமாக வயிற்று வலி ஏற்படும் வாய்ப்பும் அதிகமாவே உள்ளது. அத்திப்பழங்களை உட்கொண்டப் பிறகு குளிர்ந்த நீரைக் குடித்தால், வயிற்றுவலி ஏற்படாது. இது தவிர, அதிக அத்திப்பழங்களை சாப்பிட்டால் வாயு பிரச்சினையும் ஏற்படும்.
கல்லீரல் மற்றும் குடல் பிரச்சனை
அத்திப்பழத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்வது உங்கள் கல்லீரலில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது குடல் அடைப்பை ஏற்படுத்தும். அத்தி விதைகள் ஜீரணிக்க சற்று கடினமானவை.
இரத்தப்போக்கு சிக்கல்கள்
அத்திப்பழம் இயற்கையாகவே சூடான ஒரு பழமாகும். ஆகையால், இதை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படலாம். இது சிலருக்கு விழித்திரை இரத்தப்போக்கையும் ஏற்படுத்துகிறது. மாதவிடாயும் குறிப்பிட்ட கால அளவுக்கு முன்பகாவே வரகூடும்.
கால்சியம் குறைந்து போகும்
அதிக அத்திப்பழங்களை உட்கொண்டால் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்தும். அத்திப்பழத்தில் ஆக்சலேட்டுகள் உள்ளது. அவை உடலில் உள்ள அனைத்து கால்சியத்தையும் எடுத்துக்கொள்கின்றன. இந்நிலையில், கால்சியம் குறைபாடு காரணமாக பல நோய்களும் ஏற்படலாம்.
மேலும் படிக்க:
வருடத்திற்கு இருமுறை மட்டுமே காய்க்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மரம்
கல்க மூலிகை என்று கூறப்படும் அத்தி மரம் பற்றி உங்களுக்கு தெரியுமா?