இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 24 August, 2021 8:16 PM IST
Fitness Tips

கொரோனாவின் இரண்டாம் அலை அனைத்து தரப்பினரையும் ஆட்டி படைத்துவிட்டது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன் சிலிண்டருக்காக, ரெம்டெசிவிர் மாத்திரைக்காக, படுக்கை வசதிக்காக என அலைந்து தவித்தது கொஞ்ச நஞ்சமல்ல.

இதனால் மறுபடியும் நோய் தாக்கம், 3வது அலை வந்து விடுமோ என மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இதனால் கொரோனாவைத் தடுக்கும் வகையிலான உடற்பயிற்சிகளிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் என்ன விதமான பயிற்சிகளை மேற்கொள்வது என்பது பற்றி குழப்பம் நிலவுகிறது. இதுகுறித்து நிபுணர்கள் வழங்கியுள்ள ஆலோசனைகளைப் பார்ப்போம்.

உடற்பயிற்சி

கொரோனா பாதித்தவர்களுக்கு நுரையீரலின் திறனைப் பொறுத்தே நிபுணர்கள் பயிற்சிகள் கற்று தருகின்றனர். சி.டி ஸ்கேன் ரிப்போர்ட்டின் அடிப்படையில் பயிற்சி வழங்க
வேண்டும்.

மூக்கடைப்பு தொல்லை இருக்கிறதா, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளதா, ஆக்சிஜன் (Oxygen) அளவு எவ்வளவு உள்ளது என பாதிக்கப்பட்டு மீண்டவர்களை பரிசோதிக்க வேண்டும்.

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் கடும் உடற்பயிற்சி முறையினைப் பின்பற்றக்கூடாது. குறிப்பாக சைக்கிளிங், ஜாக்கிங், அதிகளவு உடல் சோர்வு தரும் விளையாட்டு முறைகள் போன்றவை கூடாது.

கொரோனா தொற்று பல இணை நோய் களையும் நமக்கு பரிசாகத் தந்துள்ளது. எனவே இணை நோய்களையும் கவனத்தில் கொண்டே உடற்பயிற்சிகளை (Exercise) செய்வது அவசியம்.

தேகம் மினுமினுக்கப் பயன்படும் குப்பைமேனி!

முதலில் சிறிது தூரம் வாக்கிங் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். பின்னர் வாக்கிங் செல்லும் தூரத்தை படிப்படியாக அதிகரிக்கலாம்.

மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். ஆட்கள் இல்லாத இடத்தில் முகக்கவசத்தை தவிர்க்கலாம்.

கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, கபடி போன்ற குழு விளையாட்டுக்களில் ஈடுபடக் கூடாது. ஏனெனில், யாருக்கு நோய் பாதிப்பு இருக்கிறது என தெரியாது. ஒருவரை ஒருவர் தொட்டு விளையாடும்போது, பொருட்களை பயன்படுத்தும்போது நோய் பரவல் ஏற்படும். எனவே குழு விளையாட்டுக்களை தவிர்த்து தனி நபர் விளையாட்டு,பயிற்சிகளை மேற்கொள்வதே பாதுகாப்பானது.

சுவாசத்திறனை அதிகரிப்பதற்காக பலூன் ஊதும் பயிற்சியை மேற்கொள்ளலாம். தினமும் 5 முறை இதுபோல் பலூன் ஊதி பயிற்சி மேற்கொள்வது நல்ல பலனைத் தரும்.

மூச்சுப்பயிற்சி மிகவும் முக்கியம் என்பதை சொல்ல வேண்டியதில்லை. எளிமையான சுவாசப்பயிற்சியை தினசரி மேற்கொள்ளலாம். மூச்சுக்காற்றை நன்றாக இழுத்து, நுரையீரலில் தேக்கி வைத்து, பின்பு மெதுவாக விடுவதே சரியான முறை.

உடல்திறனை வைத்து மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். முறையான பயிற்சியின்றி மூச்சை அடக்கக் கூடாது.

மேலும் படிக்க

நரம்பு மண்டலத்தை பாதிக்குமா கொரோனா வைரஸ்? மருத்துவர் விளக்கம்!

நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ இதை சாப்பிடுங்கள்!

English Summary: Fitness tips for those recovering from corona!
Published on: 24 August 2021, 08:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now