குழந்தைகள் ஆரோக்கியமாகவும் (Healthy) அதே சமயம் அவர்களின் அறிவுத்திறன் வளர மிகவும் முக்கியமானது சத்தான உணவு. சிறு வயதில் இருந்தே ஆரோக்கியமான உணவினை கொடுத்து பழகிவந்தால், அவர்கள் எதிர்காலத்தில் எந்த வித நோய் பாதிப்பையும் எதிர்த்து திடமாக வாழ முடியும். அந்த வகையில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான அந்த ஐந்து உணவுகள் என்ன என்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பால்
புரதம் (Proteins), கொழுப்பு, கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எலும்பு வளர்ச்சியடைய உதவக்கூடியது. தினமும் காலை, மாலை என இரண்டு வேளை பால் குடிப்பதை குழந்தைகளுக்கு வழக்கமாக கொள்ள வேண்டும்.
வாழைப்பழம்
பொட்டாசியம் (Potassium) நிறைந்திருப்பதால், உடலில் பல்வேறு உறுப்புகள் செயல்பட உதவுகிறது. வாழைப்பழம் மட்டுமல்லாமல் ஆப்பிள் (Apple), சாத்துக்குடி, சப்போட்டா, மாதுளை என அனைத்து பழங்களையும் கொடுத்து பழக வேண்டும்.
முட்டை
புரத சத்து நிறைந்தது. தினமும் ஒரு முட்டை (Egg), வளரும் குழந்தைகளுக்கு கொடுப்பது அவசியம்.
உலர் திராட்சை
இரும்பு சத்து (Iron), நார் சத்து (Fiber) நிறைந்தது. சில குழந்தைகள் அதை அப்படியே சாப்பிடமாட்டார்கள். அவர்களுக்கு அதை முதல் நாள் இரவே ஊறவைத்து அந்த தண்ணீரை குடிக்க கொடுக்கலாம். மலச்சிக்கல் பிரச்னை நீங்கும்.
பருப்பு வகைகள்
அன்றாடம் குழந்தைகளின் உணவில் ஏதாவது ஒரு பருப்பு வகையினை சேர்த்துக் கொள்வது அவசியம். புரதம் மற்றும் தாதுசத்து நிறைந்தது. சிப்ஸ், பப் போன்றவற்றுக்கு பதில் வேர்க்கடலை (Groundnut), பிஸ்தா மற்றும் பாதாம் போன்றவற்றை குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் போல சாப்பிட கொடுக்கலாம்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களுக்காக நச்சுன்னு 4 டிப்ஸ!
பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு! மேலும் பல பயன்கள் அறிவோம்